ஜியோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட் அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டம்.!

|

சமீபத்தில் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் டேப்லெட் மற்றும் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜியோ லேப்டாப்

GizChina அறிக்கையின்படி, வரும் 2022-ம் ஆண்டிற்குள் ஜியோ டிவி, ஜியோ டேப்டெல் மாடல்கள் வெளியிடப்பட வாய்ப்புஉள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் ஜியோ லேப்டாப் மாடலையும் வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது
ஜியோ லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!

ஜியோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட்டின்

மேலும் ஜியோ டிவி மற்றும் ஜியோ டேப்லெட்டின் முக்கிய விவரக்குறிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற ஆண்ட்ராய்டு டேப்லெட்டைப் போலவே ஜியோ டேப்லெட் பெரிய டிஸ்ப்ளே மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் ஜியோ டேப்லெட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ டேப்லெட்ஆனது சாம்சங், மோட்டோ, லெனோவா போன்ற நிறுவனங்களின் டேப்லெட் மாடல்களுடன் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!

ஜியோபோன் நெக்ஸ்ட்

புதிய ஜியோ டேப்லெட் ஜியோபோன் நெக்ஸ்ட் போன்ற பிரகதி ஓஎஸ் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிவி ஆனது OTT ஆப்ஸ்களை ஆதரிக்கும் என்றும், பின்பு ஜியோவின் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கும் செட்-டாப் பாக்ஸ் பேக்கேஜுடன் வரலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

2022 முதல் காலாண்டில் வரலாம்., நாளை உறுதிப்படுத்தலாம்: சக்தி வாய்ந்த மலவுவிலை ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி2 ப்ரோ2022 முதல் காலாண்டில் வரலாம்., நாளை உறுதிப்படுத்தலாம்: சக்தி வாய்ந்த மலவுவிலை ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி2 ப்ரோ

 நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் 5.45-

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

கேமரா வசதி உள்ளது. மேலும்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 13 எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆனால் இந்த சாதனம் கைரேகை சென்சாருடன் வரவில்லை, அதற்கு பதிலாக,
வாடிக்கையாளர்கள் பேட்டர்ன் மற்றும் பின் அடிப்படையிலான அங்கீகாரத்தை நம்பியிருக்க வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஏரி உடைந்தா மீன் ஏரியாக்கு வந்துதான ஆகனும்: குறைந்த விலை நிறைந்த சேவை- ரூ.300-க்கு கீழ் பிஎஸ்என்எல் திட்டங்கள்ஏரி உடைந்தா மீன் ஏரியாக்கு வந்துதான ஆகனும்: குறைந்த விலை நிறைந்த சேவை- ரூ.300-க்கு கீழ் பிஎஸ்என்எல் திட்டங்கள்

 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு வெளியீடுகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதான் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி குறித்து ரெண்டர்ஸ் வெளியிட்ட வடிவமைப்பு- லுக் எப்படி?இதுதான் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்: இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி குறித்து ரெண்டர்ஸ் வெளியிட்ட வடிவமைப்பு- லுக் எப்படி?

நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இதுதவிர 4ஜி, டூயல் சிம்கள், ப்ளூடூத் 4.1, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக்
மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்.

மோதி பார்க்கலாம் வாங்க: பிஎஸ்என்எல்லா., ஏர்டெல்லா?- அனைத்து திட்டத்துக்கும் இனி இது இலவசம்: பிஎஸ்என்எல் அதிரடி..!மோதி பார்க்கலாம் வாங்க: பிஎஸ்என்எல்லா., ஏர்டெல்லா?- அனைத்து திட்டத்துக்கும் இனி இது இலவசம்: பிஎஸ்என்எல் அதிரடி..!

3500 எம்ஏஎச்

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூகுள் உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட PragatiOS வசதி உள்ளது. கூகுள் அம்சங்களான Read Aloud மற்றும் Translate Now போன்ற அம்சங்களும் பிரகதி OS இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது ஜியோபோன் நெக்ஸ்ட். அதேபோல் இது முழுமையாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகும்.

கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!

ரேம் மற்றும் 32ஜிபி மெமரி

குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை ரூ.6,499-விலையில் வாங்க முடியும்.மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைககளை கிடைக்கும். பின்பு இந்த சாதனத்தை EMI விருப்பங்களிலும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio plans to launch Jio TV and Jio Tablet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X