Just In
- 7 hrs ago
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- 8 hrs ago
பக்கா ப்ரீமியம்: எல்லாமே சோனி கேமரா, 80வாட்ஸ் சார்ஜிங் வசதி: விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ அறிமுகம்!
- 9 hrs ago
வாட்ஸ்அப் குரூப்: இனி அந்த சிக்கல் இருக்காது.! வரப்போகிறது புதிய அப்டேட்.!
- 10 hrs ago
"உழைக்காமல் வளரமுடியாது" யாரும் இந்த மோசடியில் சிக்க வேண்டாம்., குறிப்பாக போலீஸ்- தமிழக டிஜிபி அதிரடி!
Don't Miss
- News
எனக்கு நீதி இல்லையா! நாங்கள் மனிதர் இல்லையா? ராஜீவ் குண்டுவெடிப்பில் காயமடைந்த பெண் அதிகாரி ஆவேசம்.!
- Finance
ஊடகத் துறையை அடுத்து மருத்துவம்.. அதானியின் புதிய பிஸ்னஸ் அறிவிப்பு!
- Sports
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை..ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. கடைசி பந்து வரை பரபர.. கொல்கத்தா நாக் அவுட்
- Movies
"சிரிப்பைக் காண பல ஆண்டுகள் காத்திருந்தேன்"..கார்த்திக் சுப்பாராஜ் ட்வீட்!
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது ரிலையன்ஸ் ஜியோ.! எதில் தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அருமையான திட்டங்கள் மற்றும் புதிய சாதனங்களையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. குறிப்பாக 2 ஆண்டுகளே
ஆன நிலையில் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது இந்நிறுவனம். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட தகவலின்படி கடந்த அக்டோபரில் 41.60 லட்சமாக இருந்தஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நவம்பரில் 43.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 47.20 லட்சமாக இருந்தது. இது நவம்பர் மாதத்தில்42 லட்சமாக சரிந்துவிட்டது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 40 லட்சமாகஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் வசமிருந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 86 லட்சமாகும். ஆனால் 2 ஆண்டுகளில்அதாவது 2021-ல் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ பாப் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு கம்மியா? அப்போ ஒரு போன் வாங்கலாம் போலயே..

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வயர் மூலமான பிராட்பேண்ட் சேவை 70 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே கூறியபடி ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது. இதே அளவில் இது வளரும்பட்சத்தில் விரைவிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஏர்டெல் விஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச BSNL ட்யூன்களைப் பெறமுடியும். அதேபோல் இந்தபிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்தவிலையில் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.19 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.19 டேட்டா வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டாநன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.56 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.56 டேட்டா வவுச்சர் ஆனது 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாகபத்து நாட்களுக்கு இலவச Zing சந்தாவுடன் வருகிறது இந்த ரூ.56 டேட்டா வவுச்சர்.

பிஎஸ்என்எல் ரூ.75 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 டேட்டா வவுச்சர் ஆனது 50 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 50 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.94 டேட்டா வவுச்சர்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 டேட்டா வவுச்சர் ஆனது 75 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு மற்றும் 60 நாட்களுக்கு இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும்.
அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது.அதேபோல் லோக்துன் நன்மையை வழங்குகிறது இந்தபிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் 22 நாட்களுக்கு ஈரோஸ் நவ்வின் இலவச ஓவர்-தி-டாப் (OTT) சந்தாவுடன் வருகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.98 திட்டம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999