ரிலையன்ஸ் ஜியோ : நீல நிறம், ஆரஞ்சு நிறம் என்ன வித்தியாசம் எனத் தெரியுமா?

By Meganathan
|

டெலிகாம் சந்தையில் மலிவு விலையில் சலுகைகளை அறிமுகம் செய்து அனைவரையும் ரிலையன்ஸ் ஜியோ வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் போது நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது, எனினும் சிறப்பு சலுகைகள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

பல்வேறு நகரங்களின் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் பயனர்களுக்கு 4ஜி சிம் கொண்ட நீல நிற பேக் வழங்கப்பட்டதாக பல்வேறு பயனர்களும் இணையத்தில் தெரிவித்தனர். வாடிக்கையாக வழங்கப்படும் ஆரஞ்சு நிற பேக்கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது?

நீல நிற பேக்

நீல நிற பேக்

நீல நிற பேக் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு போர்ட் செய்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஏற்கனவே ரிலையன்ஸ் இல்லாத சேவைகளை பயன்படுத்தி ஜியோ நெட்வர்க்களுக்கு போர்ட் செய்வோருக்கும் நீல நிற பேக் வழங்கப்படுகின்றது.

நிறுவன ஊழியர்கள்

நிறுவன ஊழியர்கள்

ஏற்கனவே தெரிவித்ததை போல் நீல நிற சிம் கார்டுகள் நிறுவன ஊழியர்களுக்கானது ஆகும். என்றாலும் இது குறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரிலையன்ஸ் ஊழியர்கள்

ரிலையன்ஸ் ஊழியர்கள்

தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கும் முன் ரிலையன்ஸ் சார்பில் ஜியோ 4ஜி சிம் கார்டுகள் அவர்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஊழியர்களின் அழைப்பு மூலம் ஜியோ சிம் கார்டு பெற்ற பயனர்களுக்கு நீல நிற பேக் கொண்ட ஜியோ சிம் வழங்கப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சேவை

சேவை

இரு நிற சிம் கார்டுகளும் ஒரே சேவைகளைத் தான் வழங்குகின்றன. நிறம் வேறுபடுவதால் சேவைகளில் எவ்வித வேறுபாடுகளும் இருக்காது. இரு நிற சிம்களிலும் அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் அன்-லிமிட்டெட் 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது.

காரணம்

காரணம்

அதிகளவு வரவேற்பு காரணமாக ஆரஞ்சு நிற சிம் கார்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், நீல நிற சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பயனர்களுக்கு ஏமாற்றமாக இருக்கக் கூடாது என்பதற்காக நீல நிற சிம் கார்டுகளை ரிலையன்ஸ் ஸ்டோர்களில் வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio Orange Pack vs Blue Pack Here's the Difference Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X