Home
News

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான விலைக்கு கேபிள் டிவி கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக தட்டித் தூக்கும்படி ஜியோ ஃபைபர் (Jio Fiber) திட்டத்தை களமிறங்கி இருக்கிறது. 150 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுப்பது மட்டுமல்லாமல், டிவி சேனல்கள், ஓடிடி சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுத்து இருக்கிறது. இந்த ஜியோ ஃபைபர் திட்டத்தின் சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

உங்க வீட்டுல கேபிள் டிவி இருக்கா? என்று கேட்கும் நிலைமையில்தான், அதன் சேவை இருக்கிறது. டிடிஎச், ஆண்ட்ராய்டு பாக்ஸ், ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவிக்கு நேரம் சரியாக இல்லை. அதிலும், ஜியோவின் ஃபைபர் திட்டங்கள் அடிமட்ட விலையில் நம்ப முடியாத சலுகைகளுடன் கஸ்டமர்களை அப்படியே மாற்றி வருகிறது. இதில் ஜியோ ஃபைபர் ரூ 1999 திட்டம் அடித்து நொறுக்குகிறது.

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம்!

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ரூ 999 விவரங்கள் (Reliance Jio Fiber Plan Rs 999 Details): இந்த ஃபைபர் திட்டத்துக்கு டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), ஓடிடி (OTT) மற்றும் டிவி சேனல்கள் (TV Channels) சலுகை இருக்கிறது. முதலில் டேட்டாவை பார்க்கலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் சலுகையில் 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும் இலவசமாக கொடுக்கப்படுக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்தை பெறலாம். ஆனால், சலுகை இதுமட்டுமல்ல 800+ டிவி சேனல்களின் சந்தாவையும் இந்த ஜியோ ஃபைபர் திட்டம் வழங்குகிறது. இதில் எச்டி சேனல்களும் அடங்குகிறது. டிவி சேனல்களுக்கு பிறகு ஓடிடி சந்தாவை தருகிறது.

அதிலும், பிரீமியம் ஓடிடி சந்தாக்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஜியோ சினிமா பிரீமியம் (Jio Cinema Premium) சந்தாக்கள் கிடைக்கிறது. மேலும், ஜீ5 (ZEE5), ஜியோ டிவி பிளஸ் (JioTv+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) சந்தா கிடைக்கிறது.

இதுபோக சோனிலிவ் (Sony Liv), ஏஎல்டிபாலாஜி (ALTBalaji), ஈராஸ்நவ் (Eros Now), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடி ஆப்களையும், டிவி சேனல்களையும் உங்களது ஆண்ட்ராய்டு டிவியின் நேரடியாக பார்த்து கொள்ளலாம். இதற்கான டிவைஸ் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த ஜியோ ஃபைபர் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆனால், விலை ரூ.999ஆக இருக்காது. ஏனென்றால், ஜிஎஸ்டி கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். அதுவே ஃபைபர் திட்டங்களை முதல் முறை பெறும்போது, ஒரு மாதத்துக்கான வேலிடிட்டியில் திட்டம் கிடைக்காது. குறைந்தபட்சமாக மூன்று மாதங்கள் வேலிடிட்டிக்கு மட்டுமே திட்டங்கள் வழங்கப்படும்.

ஆகவே, அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இருப்பினும், அடுத்த முறை திட்டத்தை 30 நாட்கள் வேலிடிட்டிக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், முதல்முறை பெறும்போது, வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ், டிவி ரிமோட் போன்ற டிவைஸ்கள் கொடுக்கப்படுகின்றன. அதேபோல இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டி இருக்கிறது. இதனாலேயே முதலில் விலை கூடுதலாக இருக்கிறது.

இதேபோல பல்வேறு ஃபைபர் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோவிடம் இருக்கிறது. டேட்டா மட்டும் போதும் என்றால், ரூ 699 விலைக்கு கிடைக்கும் ஃபைபர் திட்டத்தை நீங்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஃபைபர் டேட்டா மட்டும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படுகிறது. ஆனால், டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Offers Unlimited Voice 800 TV Channels 12 OTT 150 Mbps Data Check JioFiber Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X