ஜியோ போன் பயனரா நீங்கள்- அட்டகாச ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.73 மட்டுமே., 23 நாட்கள் வேலிடிட்டி!

|

4ஜி இணைப்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பல்வேறு பணிகளும் வீட்டில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என பல்வேறு தேவைகளுக்கும் இணைய சேவை என்பது பிரதானமாக இருந்தது. தொடர்ந்து மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை உள்ளிட்ட தேவைகளுக்கு 4ஜி இணைப்புகள் தேவை அதிகரிக்கும். இதையடுத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பரந்த அளவிலான பயனர்களுக்கு ஏற்ற திட்டங்களை கொண்டு வருகிறது. பயனர்கள் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் திட்டங்களானது தினசரி டேட்டா ப்ரீபெய்ட் பேக்குகள் ஆகும். வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை குறிப்பிட்ட அளவிலான டேட்டாவை வழங்குகின்றன.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ அனைவருக்கும் ஏற்றப்படியான பல்வேறு விலைப்பிரிவுகளில் நிறைந்த சலுகைகளோடு திட்டங்களை தொடர்ந்து தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி ஜியோ போனின் பயனர்களுக்கு சிறந்த சலுகைகளுடனான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போன் என்பது ரிலையன்ஸ் வழங்கும் 4ஜி மற்றும் வோல்ட்இ வசதி கொண்ட ஃபீச்சர் போன் ஆகும். இந்த சாதனம் KaiOS மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் முன்பே நிறுவப்பட்ட ஜியோ பயன்பாடுகள் உடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ தங்களது பயனர்களுக்கு வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ போன் வழங்கும் ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் வழங்கும் ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ போன் வழங்கும் ஆல் இன் ஒன் ப்ரீபெய்ட் திட்டத்தின் பட்டியலில் முதலில் மற்றும் மலிவானதாக இருக்கும் திட்டம் ரூ.75 திட்டமாகும். இந்த ரூ.75 திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது செல்லுபடியாகும் ஒவ்வொரு நாளும் 0.1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் வழங்கப்படும் டேட்டாவானது 2.3 ஜிபி ஆகும். இருப்பினும் தொலைத் தொடர்பு நிறுவனம் கூடுதலாக 200 எம்பி டேட்டாவை வழங்குகிறது. இதன்மூலம் மொத்தம் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு பயனர்கள் மொத்தம் 50 எஸ்எம்எஸ்களை பெறுகிறார்கள். இதைத் தொடர்ந்து ஜியோ வழங்கும் திட்டமானது ரூ.91 ஆகும். இந்த பட்டியலில் ஜியோ வழங்கும் அடுத்த திட்டமானது ரூ.91 திட்டமாகும் இது முந்த திட்டம் போன்றே 0.1ஜிபி டேட்டாவை தினசரி வழங்குகிறது. கூடுதல் 200 ண்பி மற்றும் 50 எஸ்எம்எஸ் உடன் வழங்குகிறது. இந்த திட்டானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.125 மற்றும் ரூ.152 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.125 மற்றும் ரூ.152 விலையில் கிடைக்கும் திட்டம்

ஜியோபோன் பயனர்களுக்கு ஒரே மாதிரியான பலன்களை வழங்கும் இரண்டு திட்டங்களை தொகுத்து வழங்குகின்றன. இந்த திட்டமானது ரூ.125 மற்றும் ரூ.152 விலையில் வழங்குகிறது. இந்த ரூ.152 திட்டத்தில் தினசரி 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 300 எம்எஸ்எம்களை வழங்குகிறது. அதேபோல் ரூ.125 திட்டமானது 23 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது 11.5 ஜிபி டேட்டாவை மொத்தமாக வழங்குகிறது. அதேபோல் ரூ.152 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இது மொத்தம் 14 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

பட்டியலில் இருக்கும் அடுத்த திட்டம் குறித்து பார்க்கையில், அது ஜியோவின் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டமாகும். ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் மொத்த டேட்டா 28 ஜிபி ஆகும். ஜியோபோன் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களையும் வழங்குகிறது. ஜியோ ரூ.222 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாடகள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. திட்டத்தின் மூலம் மொத்தமாக 56 ஜிபி டேட்டாவும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

ரூ.899 விலையில் வழங்கப்படும் திட்டம்

ரூ.899 விலையில் வழங்கப்படும் திட்டம்

ஜியோ போன் பயனர்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையுயர்ந்த மற்றும் நீண்ட கால திட்டத்தை வழங்குகிறது. ரூ.899 விலையில் வழங்கப்படும் திட்டமானது 336 நாட்களுக்கு செல்லுபடியானாலும் இது 28 நாட்கள் என்ற 12 சுழற்சிகளில் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மொத்தம் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 12 சுழற்சிகளில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் இது வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் உண்மையான வரம்பற்ற குரல்அழைப்புகளை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Offers All in One JioPhone Prepaid Plans For its Customers: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X