84ஜிபி டேட்டா: 28நாட்கள் வேலிடிட்டி.! ஜியோவின் தரமான திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்களையும்,சலுகைகளையும் வழங்கி வருகிறது, ஆனால் இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்கிறது, மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து வரம்பற்ற கால் அழைப்புகளை
வழங்கி வருகிறது.

இருந்தபோதிலும் ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான டேட்டா நன்மைகளை வழங்கி வருகிறது, அதுவும்
பட்ஜெட் விலையில், மேலும் இந்நிறுவனம் 84ஜிபி பயன்படுத்தக்கூடிய சிறப்பான திட்டத்தை வைத்துள்ளது, அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்
ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்
தினசரி 2ஜபி டேட்டா தேவையில்லை 1.5ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.199-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு
100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்

மேலும் சில்வர் லேக் தொழில்நுட்பம் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து ஜியோ நிறுவனத்துக்கு முதலீடு செய்துள்ளது.ஜியோவின் இந்த விற்பனை நடவடிக்கைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் (RIL) இன் கடன் சுமையைக் கண்டிப்பாகக் குறைக்க உதவும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், பேஸ்புக் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய இந்தியச் சந்தையில் கால்பதித்து ஒரு உறுதியான இடத்தை பிடிக்க இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்கிலிருந்து சுமார் 5.7 பில்லியன் டாலருக்கு மதிப்பிலான 9.9 சதவீத பங்கை பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது, இந்திய மதிப்பின் படி இந்த ஒப்பந்தத்தின் விலை சரியாக 43,574 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக
உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வழிகளில் மக்களை இணையும் ஜியோவுடன் இணைய நாங்கள் விரும்பி இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளோம். பேஸ்புக் உதவி இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியா முழுவதும் சுமார் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு" என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications