ஜியோ ஆபர்கள்: ரீசார்ஜ் செய்த பின்னர் தெரியவரும் 'உள்குத்துகள்'.!
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகள் மற்றும் அதன் பயன்பாடுகள்.
ஜியோ பல வாடிக்கையாளர்களைப் பெற பல்வேறு இலவச சலுகைகளை வழங்கியது. மேலும் தற்போது குறைவான கட்டணத்தில் மிகப்பெரிய அளவிற்க்கு கால் அழைப்புகள் மற்றும் இலவச டேட்டாவை கொடுத்தது ஜியோ நிறுவனம். தற்போது ரூபாய் 309 ரீசார்ஜ் அறிவித்து 3 மாதங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகையை வழங்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்ற ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. அதிரடி ஆபர்களை அறிவித்து மக்களை தன் பக்கம் கொண்டுவந்தது ஜியோ.

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட்:
தற்போது ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் ஆவதுக்கு ரூபாய்99 கண்டிப்பாக பெறப்படும். மேலும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டண சலுகை அடிப்படையில் வழங்கப்படும். தற்போது ஜியோ சம்மர் என்ற ஒரு சலுகையை அமல்படுத்தி பல்வேறு இலவசங்களை கொடுக்கிறது ஜியோ.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம்:
முகேஷ் அம்பானி ஜியோவில் அனைத்துமக்களும் பல சலகைகளைப் பெற முதலில் அறிவித்தது என்னவென்றால் ரூபாய் 99 செலுத்தி ப்ரைம் வாடிக்கையாளர் ஆக வேண்டும். மேலும் ஒரு வருடம் முழுவதும் பல்வேறு கட்டணச்சலுகைப் பெற கட்டாயம் ப்ரைம் மெம்பர் ஆக வேண்டும்.

ஜியோ ஆபர்:
ரிலையன்ஸ் ஜியோ பொருத்தமாட்டில் ஜனவரி மாதம் ஹேப்பி நியூ இயர் என்ற ஆபரை அறிவித்தது இதன்மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெற்றது ஜியோ நிறுவனம்

ரூ.309 ரீசார்ஜ்:
தினசரி 1ஜிபி வரை 4ஜி டேட்டா பெற கண்டிப்பாக 309 ரூபாய் பெருவது கட்டாயம் ஆகும். மேலும் பல்வேறு பொதுமக்கள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

ரூ. 499 மற்று 509 ரீசார்ஜ்:
தற்போது தினசரி 2ஜிபி வரை 4ஜி டேட்டா பெற ரூபாய் 499 மற்றும் 509 முறையே ரீசார்ஜ் செய்தால் போதும் அத்திட்டத்தை பயன்படுத்தலாம். தற்போது இதன் இன்டர்நெட்டின் வேகம் மிக வேகமாக செயல்படுகிறது. மேலும் இவற்றில் ப்ரைம் மெம்பர்க்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது

மை ஜியோ:
தற்போது அனைத்து சேவைகளையும் எளிதில் பார்க்க மை ஜியோ பிரிவில் வலைத்தளத்தில் உள்நுழைந்து, உங்கள் செயல்திட்ட திட்டத்தை பார்க்கமுடியும். இலவச ஆபர்கள் போன்றவற்றை மிக எளிதாக மை ஜியோ ஆப் மூலம் பார்க்க முடியும்.

ஜியோ சேவைப்பிரிவு:
பயனீட்டாளர் எந்த செயல்முறையை அறிய ஜியோ கால் அழைப்பு சேவைப்பிரிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்ää பயனீட்டாளர் தேவைக்கேற்ப செயல்முறைகளை மிக தெளிவாக எடுத்து கூறுகிறது ஜியோ.

ரிலைன்ஸ் ஜியோ 4ஜி:
ஜியோ 4ஜி-ல் மிகப்பெரிய மாற்றம் ஏர்ப்பட்டுள்ளது தற்போது ஜியோ டவுன்லோடு வேகம் சராசரியாக 17.43 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. மேலும் இதன் பதிவிறக்க வேகம் 10.27 ஆக உள்ளது.

ஜியோ திட்டம்:
ரிலையனஸ் ஜியோ நிறுவனம் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இலவச சலுகைகளைத் தொடர வாய்ப்புள்ளது. அதாவது ஜியோ பல சலுகைகளை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலவசசேவை:
ஜியோ தொடக்கம் முதல் பல்வேறு இலவச சேவைகளை வழங்கியது. முதலில் டிசம்பர் 2017 வரை இலவச ஆபர்களை அறிவித்தது. பின் ஜனவரி மாதம் முதல் மாரச் வரை ஹேப்பி நியூ இயர் ஆபரை அறிவித்தது. மேலும் 99 ரூபாய் செலுத்தி ப்ரைம் வாடிக்கையாளர் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்க்குப்பின் 303 மற்றும் 309 கட்டணங்களை அறிவித்து பல வாடிக்கையாளர்களை தன் பக்கம் கொண்டுவந்தது ஜியோ.


Click it and Unblock the Notifications