Home
News

மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.! பெறுவதற்கான வழிமுறை.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது, இருந்தபோதிலும் சிறந்த டேட்டா திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிவருகிறது. தற்சமயம் இந்நிறுவனம் மீண்டும் தனது பயனர்களுக்கு இலவசமாக கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

 2ஜிபி அளவிலான டேட்டா

2ஜிபி அளவிலான டேட்டா

அதன்படி இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் வழியாக ஜியோ பயனர்கள் தினமும் 2ஜிபி அளவிலான டேட்டா மொத்தம் 5நாட்களுக்கு பெறலாம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் 10ஜிபி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்கும்.

அட்டகாசமா சலுகை உங்களுக்கு

இந்த அட்டகாசமா சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளாதா இல்லையா என்பதை ஜியோ ஆப் மூலம் மை பிளான்ஸ்வழியாக ஒருவர் அறிந்து கொள்ள முடியும். இந்த இலவசமான டேட்டா சலுகைக்காக ஜியோ நிறுவனம் ஆனது
எந்த வகையான தகுதிகள் மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. இந்த சலுகை ஆனது சீரற்ற முறையில் ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ம் இதேபோன்ற ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் வெளியிட்டது

கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோன்ற ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் வெளியிட்டது, அதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட
வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை மொத்தம் நான்கு நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம்வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களில் டபுள்

அன்மையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களில் டபுள் டேட்டா சலுகை மற்றும் சில திட்டங்களில் மாற்றங்களையும் செய்துள்ளது, அதன்படி இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதன் ப்ரான்ஸ் திட்டத்திலிருந்து மிகவும் விலையுயர்ந்த

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரான்ஸ் திட்டத்திலிருந்து மிகவும் விலையுயர்ந்த டைட்டானியம் திட்டம் வரை என அதன்
அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களிலும் புதிய டேட்டா நன்மையை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

. தற்சமயம் இந்த திட்டம் 350ஜிபி அளவிலான டேட்டாவை

ஜியோ நிறுவனம் வலைதளத்தின்படி ஜியோஃபைபர் ரூ.699 ப்ரான்ஸ் மாதாந்திர திட்டமானது முன்னதாக 250 அளவிலான டேட்டாவை வழங்கியது. தற்சமயம் இந்த திட்டம் 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

 ஜியோ ஃபைபர் சில்வர்

ரூ. 849 மதிப்புடைய ஜியோ ஃபைபர் சில்வர் மாதாந்திர திட்டமானது இப்போது 800 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

வரம்பற்ற டேட்டா

ஜியோ நிறுவனத்தின் கோல்ட் திட்டத்தில் (பிளான்) இப்போது 250எம்.பி.பி.எஸ் வேகத்தின்கீழ் மாதத்திற்கு 1,750 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் டயமண்ட் திட்டத்தில் இப்போது 500எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் மாதத்திற்கு 4000ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டா வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

7,500 ஜிபி அளவிலான டேட்டாவை

கடைசியாக பிளாட்டினம் திட்டத்தில் 1ஜி.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 7,500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம். மேலும் டேட்டாவை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களும் சில இலவச நன்மைகளை வழங்குகின்றன, அதைப் பற்றி பார்ப்போம்.

ரூ.1,200 மதிப்புள்ள டிவி

அதாவது இந்த ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் இலவச ஜியோ வாய்ஸ் அணுகல், ஆண்டுக்கு ரூ.1,200 மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் கான்பிரன்ஸ் சலுகைகள், வீட்டு நெட்வொர்க்கிங் உடன் ஸீரோ-டிலே கேமிங் அனுபவம் போன்றவைகளையும் பயனர்கள் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offering Free 2GB Daily High-Speed Data Benefit to Select Users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X