ரூ.300/- அல்லது அதற்கு மேலான ஜியோ ரீசார்ஜ்களுக்கு அதிரடி கேஷ் பேக் ஆபர்.!

|

பெரும்பாலான ஜியோ வாசிகளின் ரீசார்ஜ் காலக்கெடு முடிவுக்கு வந்துள்ள நிலைப்பாட்டில் மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில், அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பேடிஎம் ஆப் மூலம் ரீசார்ஜ் நிகழ்த்தும் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான கேஷ் பேக் சலுகைகளை அறிவித்துள்ளது.

ரூ.300/- அல்லது அதற்கு மேலான ஜியோ ரீசார்ஜ்களுக்கு அதிரடி கேஷ் பேக்.!

இந்த முறை அம்பானி வகுத்துள்ள மாஸ்டர் பிளான் என்ன.? இதன் கீழ் என்னென்ன கேஸ் பேக் ஆபர்கள் நமக்கு கிடக்கிறது மற்றும் அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய வழிமுறைகள் பற்றிய விரிவான தொகுப்பே இது.

ரூ.76/- கேஷ் பேக்

ரூ.76/- கேஷ் பேக்

ஜியோ அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.300/- அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ் நிகழ்த்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76/- கேஷ் பேக் கிடைக்கும்.

அனைவரும் இதை அணுகலாமா.??

அனைவரும் இதை அணுகலாமா.??

இந்த கேஷ்பேக் சலுகையை பெற நீங்கள் பேடிஎம் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கானதா அல்லது அனைவரும் இதை அணுகலாமா.?? என்பதில் இன்னும் தெளிவில்லை.

ஒரு விளம்பர குறியீடு

ஒரு விளம்பர குறியீடு

எனினும், இந்த சலுகையை பெறக்கூடிய வாடிக்கையாளர்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் பேடிஎம் ஆப்பில் இந்த கேஷ் பேக் சலுகைக்கான ஒரு விளம்பர குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் பெறுபவராயின் நீங்கள் இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

சரி, கேஷ் பேக் பணத்தை பெறுவது எப்படி.?

சரி, கேஷ் பேக் பணத்தை பெறுவது எப்படி.?

- 'பேடிஎம்' ஐ திறந்து, 'மொபைல் போஸ்ட்பெயிட் அல்லது மொபைல் ப்ரீபெய்ட்' என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ஜியோ எண்ணை உள்ளிட்டு, 'ரீசார்ஜ் செய்ய தொடரவும்'
- 'ஹேவ் ஏ ப்ரோமோ கோட்.?' என்ற செயல்படுத்தப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்
- பின்னர் விளம்பர குறியீட்டை உள்ளிட்டு 'டன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சலுகைகள் பட்டியலில்

சலுகைகள் பட்டியலில்

தற்போது, பேடிஎம் அதன் சலுகைகளின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ விளம்பர குறியீட்டை பட்டியலிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் நீங்கள் கைமுறையாக விளம்பர குறியீட்டை உள்ளிட விரும்பவில்லை எனில், பயன்பாட்டின் சலுகைகள் பட்டியலில் இருந்து நேரடியாக சலுகை ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

ரூ.75/- கேஷ் பேக்

ரூ.75/- கேஷ் பேக்

ரீசார்ஜ் வெற்றிகரமாக முடிந்தவுடன், ரூ.76/- கேஷ் பேக் ஆனது 24 மணி நேரத்திற்குள் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதோடு, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.75/- கேஷ் பேக் சலுகையை பெற நீங்கள் 'ஃபோன் பி' ஆப் மூலம் ரூ.300 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ் செய்ய கிடைக்கப்பெறும்.

இரண்டு புதிய கட்டண திட்டங்கள்

இரண்டு புதிய கட்டண திட்டங்கள்

தற்போது ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய கட்டண திட்டங்களை ரூ.399 மற்றும் ரூ.349 என்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்பதும், ரூ.399/- திட்டம்ம் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை மொத்தம் 84 நாட்களுக்கு பயனர்களுக்கு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio offering Rs 75, Rs 76 cash back via Paytm and PhonePe, all you need to know about exciting offers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X