3200ஜிபி டேட்டாவை அள்ளித்தரும் ஜியோ! இந்த ஆப்பரை பெறுவது எப்படி?
புதிய மற்றும் பழைய ஜியோ பயனன்களுக்கு பொருந்தும் இந்த சலுகையை பெற, முதலில் ரூ198 அல்லது ரூ299 ப்ரீபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனத்துடன் கைகோர்த்து, 'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை'(Reliance Jio Oppo Monsoon Offer) திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகப்படியான சலுகைகளை அள்ளித் தந்துள்ளது. ரூ4,900 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 3200ஜிபி வரையிலான 4ஜி டேட்டாவையும் சலுகையாக தருகிறது ஜியோ. 'ரியல்மீ' தொடரை தவிர,அனைத்து புதிய ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் இந்த சலுகை மூலம் 3.2டிபி 4ஜி டேட்டாவை ஒருவர் பெற முடியும்.

ஜூன்28 முதல் துவங்கிய இந்த 'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை' திட்டம், செப்டம்பர் 25 வரை தொடரவுள்ளது. இந்த ஜியோ மற்றும் ஓப்போ ஆப்பர் மூலம், புதிதாக ஓப்போ ஸ்மார்ட்போன் வாங்கும் ஒருவர் ரூ4,900 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 3200ஜிபி வரையிலான 4ஜி டேட்டாவையும் சலுகையாக பெற முடியும்.

இந்த ஆப்பரை பெறுவது எப்படி?
புதிய மற்றும் பழைய ஜியோ பயனன்களுக்கு பொருந்தும் இந்த சலுகையை பெற, முதலில் ரூ198 அல்லது ரூ299 ப்ரீபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஜூன் 28 முதல் செப்டம்பர் 25 வரை கிடைக்கும் ஆப்பர், இந்த இரு வகை ரீசார்ஜ்களை செய்தால் மட்டுமே கிடைக்கும்.

'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை' திட்டத்தின் பலன்கள்:
1) உடனடி பணமீள்பெறல் (Instant Cashback)
புதிய ஓப்போ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ரூ1,800 மதிப்பிலான் பணமீள்பெறலை உடனடியாக வழங்குகிறது ஜியோ. இது ரூ50 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் தரப்படும்.

2) ஜியோமணி கிரிடிட்
இதன் மூலம் பயனர்கள் தங்களின் ஜியோவாலட்டில் மூன்று சரிசம பகுதிகளாக பணத்தை பெறுவர். அதாவது ஒவ்வொருமுறையும் ரூ600, உங்களின் ஜியோ எண்ணை 13வது, 26வது மற்றும் 36வது முறை ரீசார்ஜ் செய்யும் போது பெறுவீர்கள்.

3) மேக் மை டிரிப் ஆப்பர் (MakeMyTrip Offer)
கேஸ்பேக் மற்றும் ஜியோமணி சலுகைகள் தவிர்த்து, ஜியோ நிறுவனம் மேக் மை டிரிப் நிறுவனத்துடன் இணைந்து ரூ1300 மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம் ஓப்போ பயனர்கள் மேக் மை டிரிப்பின் தள்ளுபடி கூப்பன்களை பெறுவர்.

இச்சலுகையை பெறுவதற்கான ரீசார்ஜ் திட்டங்கள்
'ரிலையன்ஸ் ஜியோ ஓப்போ பருவமழைக்கால சலுகை' மூலம் கிடைக்கும் பணமீள்பெறல் மற்றும் தரவு பலன்களை பெற இரு ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ199 திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 2ஜிபி என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 56ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பீரிமியம் ஜியோ செயலிகளை உபயோகப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.

ஜியோ ரூ299 திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளுக்கு 3ஜிபி என்ற வீதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 84ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பீரிமியம் ஜியோ செயலிகளை உபயோகப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications