Home
News

சிறந்த திட்டம் இதுதான்- ஜியோ தான் மாஸ்: 84 நாட்கள் வேலிடிட்டி உடன் சிறந்த பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு பல்வேறு விலைப்பிரிவில் தொடர்ந்து திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து நிறுவனம் தொடர்ந்து பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கூடுதல் சலுகையாக ரூ.200-க்கு மேல் விலையுள்ள திட்டங்களுடன் ஜியோமார்ட் சிறந்த கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. ஜியோ மார்ட் சலுகையாக 20% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜியோ பயனர்களுக்கு வழங்கும் 84 நாட்கள் வேலிடிட்டி திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

84 நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

84 நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் 56 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை விட 84 நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அதிக பயன் கொடுப்பதாக இருக்கிறது. ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டமானது இந்த ஆண்டின் உயர்ந்த விலை கொண்ட திட்டமாகும். ஜியோ 84 நாட்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா, 3 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு தினசரி டேட்டா நன்மைகளை வழங்குகின்றன.

தினசரி 1.5 ஜிபி டேட்டா

தினசரி 1.5 ஜிபி டேட்டா

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.666 திட்டமானது பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகையோடு வழங்குகிறது. ஜியோ திட்டங்களின் கவர்ச்சிகரமான ஜியோ பயன்பாடுகளுக்கான சலுகைகளையும் வழங்குகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ பாதுகாப்பு மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல்வேறு ஜியோ அணுகலை வழங்குகிறது.

தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை

தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை

84 நாட்கள் வேலிடிட்டி திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது ரூ.719 என்ற விலையில் வருகிறது. அதேபோல் 84 நாட்கள் வேலிடிட்டியோடு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டமானது ரூ.1,199 என்ற விலையோடு வருகிறது. தினசரி 2 ஜிபி டேட்டாவை விட தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டமானது ரூ.53 மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டும். பயனர்கள் கூடுதலாக 500 எம்பி டேட்டாவை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளோடு வருகிறது.

ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டம்

ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV,JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும்.அதன்படி ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறுநன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள்

தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகள்

முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Reliance Jio Offered Best Recharge Plans With 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X