Home
News

4G கதை முடிந்தது.. ரூ.150-க்கு இறக்கிய அம்பானி.. இனி 3 மாதங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி.. Jio யூசர்களுக்கு குஷி!

முகேஷ் அம்பானி கொடுத்தா வாரி வாரிதான் கொடுப்பாரு போல, இப்போது வெறும் ரூ.151 மதிப்பிலான திட்டத்தில் 3 மாதங்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) களமிறக்கி இருக்கிறார். ஒட்டுமொத்த ஜியோ (Jio) கஸ்டமர்களும் அடிமட்ட விலைக்கு 4ஜி திட்டத்தில் இருந்து 5ஜிக்கு மாறும்படியான இந்த திட்டம் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வேறு என்ன சலுகைகள் கிடைக்கிறது? இதன் வேலிடிட்டியில் இருக்கும் வரம்பு என்ன? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் 4ஜி டேட்டா சேவையை தொடங்கியபோது, வருட கணக்கில் இலவசமாக டேட்டாவை கொடுத்தது. இப்போது, ஒட்டுமொத்த டெலிகாம் மார்கெட்டும் 5ஜி டேட்டாவுக்கு மாறி வருவதால், மீண்டும் பழையபடி இலவசத்தை களமிறக்கி இருக்கிறது. ஆனால், மலிவான விலையை கஸ்டமர்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

4G கதை முடிந்தது.. ரூ.150-க்கு இறக்கிய அம்பானி.. இனி 3 மாதங்களுக்கு!

அதாவது, 4ஜி திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு அப்கிரேட் திட்டங்களை அடிமட்ட விலைக்கு வைத்திருக்கிறது. இதை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு இத்தனை ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எந்தவொரு லிமிட்டும் கிடையாது.

இதனாலேயே கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு 5ஜி திட்டங்களுக்கு மாறி வருகின்றனர். இவர்களை ரூ.51, ரூ.101 மற்றும் ரூ.151 மதிப்பிலான திட்டங்கள் தட்டித் தூக்குகிறது. முதலில் 4ஜி டேட்டா வவுச்சர்களாக கிடைத்த இந்த திட்டங்கள் இப்போது 5ஜி அப்கிரேட் திட்டங்களாக கிடைக்கின்றன. ஆகவே, 4ஜி டேட்டாவுடன் 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.

ரூ.51 மதிப்பிலான 5ஜி அப்கிரேட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 3 ஜிபி 4ஜி டேட்டா சலுகை கிடைக்கும். இந்த 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா வவுச்சரை பெறுவதற்கு, 1.5 ஜிபி டேட்டாவை தினமும் கொடுக்கும் பேஸ் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

இந்த திட்டம் 30 நாட்களுக்குள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால், 4ஜி திட்டத்தை அன்லிமிடெட் 5ஜி திட்டமாக கஸ்டமர்கள் மாற்றி கொள்ளலாம். இதற்கு அடுத்து ரூ.101 மதிப்பிலான 5ஜி அப்கிரேட் திட்டம் இருக்கிறது. இந்த 5ஜி அப்கிரேட் வவுச்சரில் 6 ஜிபி 4ஜி டேட்டா வருகிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

இந்த 4ஜி டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா கொடுக்கும் திட்டத்தை வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த அப்கிரேட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 1 மாதம் மற்றும் அதிகபட்சம் 2 மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டமாக அது இருக்க வேண்டும்.

இப்போது, ஜியோ ரூ.151 திட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 1.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன் 2 அல்லது 3 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் உங்களிடம் இருந்தால், இந்த அன்லிமிடெட் 5ஜி அப்கிரேட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

முந்தைய திட்டங்களை போல 4ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 9 ஜிபிக்கான 4ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 3 மாதங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ரூ.151 செலவு செய்தால் போதும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Offer Unlimited 5G Data With Rs 151 Rs 101 And Rs 51 Plans Check 5G Upgrade Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X