அம்பானியின் அடுத்த அதிரடி: வெறும் ரூ.400/-க்கு கற்பனைக்கு எட்டாத சேவை.!

ஜியோ ஹோம் டிவி சேவையின் கீழ் வெறும் ரூ.400/-க்கு 200 க்கும் மேற்பட்ட எஸ்டி (ஸ்டாண்டார்ட்) மற்றும் எச்டி (ஹை டெபினிஷன்) சேனல்கள் அணுக கிடைக்குமாம்.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வரவிருக்கும் சேவைகளில் ஒன்றான - ஜியோ ஹோம் டிவி (JioHomeTV) பற்றிய சில விவரங்கள் வெளியாகி உள்ளது. ஜியோ ஹோம் டிவி சேவையின் கீழ் வெறும் ரூ.400/-க்கு 200 க்கும் மேற்பட்ட எஸ்டி (ஸ்டாண்டார்ட்) மற்றும் எச்டி (ஹை டெபினிஷன்) சேனல்கள் அணுக கிடைக்குமாம்.

அம்பானியின் அடுத்த அதிரடி: வெறும் ரூ.400/-க்கு கற்பனைக்கு எட்டாத சேவை!

அதெல்லாம் சரி, இந்த ஜியோ ஹோம் டிவி சேவை என்றால் உண்மையில் என்ன.? இது நீண்ட காலமாக வதந்திகளில் சிக்கி தவித்த ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவையா.? அது விரைவில் தொடங்கப்படுமா.? போன்ற கேள்விகளை ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவிடம் முன்வைத்த போது பல தெளிவுகள் பிறந்தன.

ஜியோ ஹோம் டிவி தான் ஜியோவின் டிடிஎச் சேவையா.?

ஜியோ ஹோம் டிவி தான் ஜியோவின் டிடிஎச் சேவையா.?

முதலில் JioHomeTV சேவையானது, மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜியோ டிடிஎச் சேவையாக இருக்கும் என்பதை உள்ளூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் கூட நம்பவில்லை. எனவே, ஜியோ டிடிஎச் சேவையானது மிக விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அப்படியானால், இந்த ஜியோ ஹோம் டிவி சேவையின் கீழ் சேனல்களுக்கான அணுகல் எப்படி கிடைக்கும்.?

எச்டி தர ஸ்ட்ரீமிங் சேவை.!

எச்டி தர ஸ்ட்ரீமிங் சேவை.!

ரிலையன்ஸ் ஜியோவின் JioHomeTV ஆனது, கடந்த சில வருடங்களாக eMBMS அல்லது Enhanced Multimedia Broadcast Multicast Service வழியிலான சோதனைகளை நிகழ்த்தி வந்த, JioBroadcast ஆப் ஆக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆப் ஆனது, Jio LTE-Broadcast சோதனை சாதனங்களில் எச்டி தர ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதற்காக (கூகுள் பிளே ஸ்டோர் வழியாக) பயன்படுத்தப்பட்டது.

அடுத்த சில வாரங்களில்.!

அடுத்த சில வாரங்களில்.!

இருந்தாலும் குறிப்பிட்டுள்ள JioBroadcast ஆப் ஆனது, கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது அணுக கிடைக்கப் பெறவில்லை (ஆனால் ஏபிகே பைலாக இணையத்தில் கிடைக்கிறது). இந்நிலைப்பாட்டில் வெளியான ஆதாரங்களின்படி, சோதனைகள் முடிவு பெற்றுவிட்ட காரணத்தினால் JioBroadcast சேவையானது அடுத்த சில வாரங்களில் ஜியோ பயனர்களுக்கு நேரடியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.

ஒரு சிக்கல் இருக்கிறது.!

ஒரு சிக்கல் இருக்கிறது.!

இந்த இடத்தில் தொலைகாட்சி & ரேடியோ சேனல்கள் மற்றும் டெலிகாம் சேவை வழங்குநர்களால் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் செயல்முறைக்கு இடையேயான ஒரு பெரிய அடிப்படை வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொலைகாட்சி மற்றும் ரேடியோ சேனல்கள் ஆனது ஒரு வழி தொடர்பு செயல்முறையை பயன்படுத்துகிறது. அது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயனர்களை சென்றடையும். மறுகையில் உள்ள, டெலிகாம் சேவை வழங்குநர்களால் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் செயல்முறையானது இரு வழி தொடர்பு சேனல்கள் ஆகும். இது ஒரு நேரத்தில் 100-200 பயனர்களை மட்டுமே சென்றடையும்.

ஒரு ஹைபரிட் தொழில்நுட்பம் ஆகும்.!

ஒரு ஹைபரிட் தொழில்நுட்பம் ஆகும்.!

இருப்பினும், eMBMS அல்லது மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா பிராட்காஸ்ட் மல்டிகாஸ்ட் சேவையானது ஒரு ஹைபரிட் தொழில்நுட்பம் ஆகும் என்பதும், இது டிவி சேனல்கள் மற்றும் எப்எம் ரேடியோக்களால் பயன்படுத்தப்படும் ஒன்-டூ ஒன் கட்டமைப்ப்பையும் சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ஒரு ஆக்டிவ் இன்டர்நெட் தேவையில்லை.!

ஒரு ஆக்டிவ் இன்டர்நெட் தேவையில்லை.!

இந்த சேவையின் சிறப்பான பகுதி என்னவென்றால், இதை பயன்படுத்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆக்டிவ் இன்டர்நெட் தேவையில்லை என்பது தான். ஏனெனில் சில உள்ளடக்கங்கள், broadcast mode-ன் கீழ் எச்டி தரத்தில் அணுக கிடைக்கும். எனவே, JioBroadcast என்கிற சேவையானது JioHomeTV ஏ என்கிற பெயரின் கீழ் அனுக கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

MyJio பயன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.!

MyJio பயன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.!

இந்த சேவையில் இருக்கும் ஒரே ஒரு குழப்பம் என்னவெனில், JioHomeTV ஆனது eMBMS சேவையின் கீழ் தான் இயங்கும் என்பதில் உறுதிப்பாடு இல்லை. இருந்தாலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஸ்டி மற்றும் எச்டி சேனல்கள் பற்றிய விவரங்கள் MyJio பயன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே, முகேஷ் அம்பானியின் புதிய முயற்சியின் கீழ் விசேஷமான ஒரு சேவையை நாம் விரைவில் பெறவுள்ளோம் என்பது உறுதி.

Best Mobiles in India

English summary
Reliance Jio to Offer SD and HD Channels at Rs 400 Under JioHomeTV. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X