ஜியோ அதிரடி: ரெட்மீ நோட் 5 & நோட் 5 ப்ரோவிற்கு உடனடி கேஷ்பேக்; பெறுவது எப்படி.?

|

நேற்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி நிறுவனடகின் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடியான, உடனடி கேஷ்பேக் வாய்பு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அறிவித்துள்ளது.

ஜியோ அதிரடி: ரெட்மீ நோட் 5 & நோட் 5 ப்ரோவிற்கு உடனடி கேஷ்பேக்.!

இதில் மிகப்பெரிய ஆச்சரிய, என்னவெனில் ஸ்மார்ட்போன்களை ​அறிமுகம் செய்துள்ள சியோமி நிறுவனம் கூயோட எந்தவொரு சலுகையையும் அறிவிக்கவில்லை, ஆனால் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின் கீழ், ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகிய ரூ கருவிகள் மீதும் ரூ.2,200/- என்கிற கேஷ்பேக் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஜியோ அதிரடி: ரெட்மீ நோட் 5 & நோட் 5 ப்ரோவிற்கு உடனடி கேஷ்பேக்.!

அதை ;பெறுவது எப்படி என்பதையும், அறிமுகமான ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் எஅம்சங்கள் என்னென்ன என்பதையும் விரிவாக காண்போம்.

வவுச்சர்கள் கிடைக்கும்.!

வவுச்சர்கள் கிடைக்கும்.!

இந்த சலுகை வாய்ப்பின் கீழ் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவோர்களுக்கு ரூ.50/- மதிப்புள்ள 44 வவுச்சர்கள் கிடைக்கும். அதை நீங்கள் மைஜியோ பயன்பாட்டில் எதிர்கால ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.198 அல்லது ரூ.299.!

ஜியோவின் ரூ.198 அல்லது ரூ.299.!

இந்த ரூ.2,200/- இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வாய்ப்பை பெற விரும்பும் பயனர்கள் ஜியோவின் ரூ.198 அல்லது ரூ.299/- ஆகிய கட்டணத் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பின்னர் வாடிக்கையாளரின் ஜியோ கணக்கில் வவுச்சர்கள் வரவு வைக்கப்படும்.

ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.!

ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது.!

மேற்க்குறிப்பிட்டுள்ளபடி, இந்த வவுசிகார்கள் ஆனது மைஜியோ பயன்பாட்டில் எதிர்கால ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒவ்வொரு பயனருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வவுச்சரைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரட்டை தரவு நன்மை.!

இரட்டை தரவு நன்மை.!

இந்த கேஷ்பேக் வாய்ப்புடன், இந்த சியோமி ஸ்மார்ட்போன்களை வாங்குவோர்களுக்கு முதல் மூன்று ரீசார்ஜ்களில் இரண்டு மடங்கு தரவும் கிடைக்கும். அதாவது ரூ.198/- திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் உடனடியாக ரூ.2,200/- என்கிற கேஷ்பேக் உடன் மற்றும் இரட்டை தரவு நன்மையையும் பெறுவீர்கள்.

112ஜிபி அளவிலான டேட்டா.!

112ஜிபி அளவிலான டேட்டா.!

ஜியோ ரூ.198/- என்கிற கட்டணத் திட்டமானது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஆனால்ரெட்மீ நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ வாங்கும் பயனர்களுக்கு, 112ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

ரெட்மீ 5ஏ-க்கு ரூ.1,000/- கேஷ்பேக்

ரெட்மீ 5ஏ-க்கு ரூ.1,000/- கேஷ்பேக்

இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், மேலும் நீங்கள் ஒரு கனரக தரவு பயனர் என்றால், இதுவொரு அட்டகாசமான வாய்ப்பாகும். இதுவொன்றும் சியோமி ஸ்மார்ட்போன்கள் மீதான ஜியோவின் முதல் கேஷ்பேக் வாய்ப்பல்ல என்பதும் ஏற்கனவே ரெட்மீ 5ஏ-க்கு ரூ.1,000/- கேஷ்பேக் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது.!

ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது.!

அம்சங்களை பொறுத்தமட்டில், புதிய சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ சமாரிபோன் ஆனது ரூ.13,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்ககளுமே, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் தனித்தனியாக, அடுத்த வாரம் தொடங்கி விற்பனைக்கு வரும்.

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னணி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிய அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. அது ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் உடனானன் 3 ஜிபி / 4ஜிபி ரேம் முறையில் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

இந்த சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை அதன் அட்ரெனோ 506 ஜிபியூ கவனித்து கொள்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/ 2.2 துளை மற்றும் 1.25 லென்ஸ் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும் பின்புற கேமராவானது பிடிஏஎப் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் ஆகியவற்றுக்கான ஆதரவும் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது இதன் இரண்டு கேமராக்களுமே1080பி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைரேகை ஸ்கேனர் ஆனது பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது

இறுதியாக இந்த தொலைபேசியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு ஆனது ரூ.9999/-க்கு கிடைக்க மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.11,999/-க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி +  5எம்பி

12எம்பி + 5எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
6 ஜிபி ரேம் + 64 ஜிபி

6 ஜிபி ரேம் + 64 ஜிபி

ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாறுபாடானது முறையே ரூ.13,999/-க்கும் மீதமுள்ள இரு மாறுபாடுகளும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும். மேலும் பல டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைத்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio to Offer Instant Rs 2,200 Cashback on Xiaomi Redmi Note 5 and Redmi Note 5 Pro Smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X