அம்பானி ஆஃபர்.. இனிமே ரூ.189-க்கு வருவீங்க.. 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. Jio-வுக்கு குஷி!
முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டமானது (Prepaid Plan) ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் குளிர செய்துள்ளது. வெறும் ரூ.189 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, ஜியோ சினிமா, ஜியோ டிவி போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளையும் களமிறக்கி இருக்கிறது. இதேபோல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 5 அடிமட்ட திட்டங்களை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம். இவை ரூ.350-க்கும் கீழ் கிடைக்கின்றன.
ஜியோ ரூ 189 திட்டம் (Jio Rs 189 Plan): இதுவொரு ஜியோ வேல்யூ திட்டமாகும் (Jio Value Plan). இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த 2 ஜிபியானது, லம்ப்-சம் டேட்டா சலுகையாகும். ஆகவே, அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும்.

ஆகவே, வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பக்காவாக இருக்கும். இருப்பினும், 300 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. அதேபோல ஜியோசினிமா (JioCinema) சந்தாவை பெறலாம். ஆனால், பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. மேலும், ஜியோடிவி (JioTV) சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 249 திட்டம் (Jio Rs 249 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவை பெற்று கொள்ள முடியும். ஆகவே, நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டாவை பெறலாம். இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கும். டேட்டாவை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.
முந்தைய வேல்யூ திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. அதோபோல ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா சந்தாவை பெற்று கொள்ளலாம். 28 நாட்களுக்கு தினசரி டேட்டாவுடன் (Daily Data) கிடைக்கும் மலிவான திட்டம் இது மட்டுமேயாகும்.
ஜியோ ரூ 299 திட்டம் (Jio Rs 299 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை வருகிறது. அதாவது, 1.5 ஜிபி டேட்டாவை தினசரிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. ஜியோ ஆப்களை பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 329 திட்டம் (Jio Rs 329 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சலுகை கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ 349 திட்டம் (Jio Rs 349 Plan): 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் இதில் 2 ஜிபி டேட்டா நாளொன்றுக்கு கிடைக்கிறது. ஆகவே, 56 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெறலாம். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோசினிமா மற்றும் ஜியோடிவி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications