மறுபடியும் முடிச்சாச்சு.. Jio இருக்கா.. ரூ.448 எடுத்து வைங்க.. வாய்ஸ் கால்கள்.. 5ஜி டேட்டா.. 13 ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் எங்கயும் போக முடியாது, எங்கிட்டத்தான் வந்தாகனும் என்று சொல்லாமல் சொல்லும்படியான திட்டம் களமிறக்கப்பட்டு இருக்கிறது. ரூ.500-க்கும் கம்மியான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 13 ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், இருக்கும் அத்தனை சலுகைகளும் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் இந்த திட்டம் போதும்பா என்று நீங்களே சொல்லும் அளவுக்கு சலுகைகள் இருக்கின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகளை பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஜியோ ரூ 448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 OTT Plan Details): இதுக்குனே மாதம் ரூ.500 எடுத்து வைக்கலாம் போலயே என்று தோன்றும்படி இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி முழுவதும் டேட்டாவுக்கு வேறு திட்டம் தேவைப்படாது. ஏனென்றால், 4ஜி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.

ஆகவே, 5ஜி டேட்டா சலுகை போக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த 5ஜி மற்றும் 4ஜி டேட்டா இல்லாமல், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகையே பட்டையை கிளப்புவதை போல தோன்றலாம். ஆனால், சலுகையே இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. ஓடிடிக்கு பஞ்சமே இதில் கிடையாது.
ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium), சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) போன்ற முன்னணி ஓடிடி ஆப்கள் பயன்படுத்த கிடைக்கிறது. மேலும், லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), பிளானட் மராத்தி (Planet Marathi), ஃபேன்கோட் (FanCode), சன்நெக்ஸ்ட் (SunNXT) மற்றும் கான்ச்சா லங்கா (Kanchha Lannka) ஆப்களும் கிடைக்கின்றன.
இதுபோக டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் சாவ்பால் (Chaupal) ஆப்களையும் பயன்படுத்தலாம். இப்போது, ஓடிடி மற்றும் டேட்டா சலுகைகளுக்கு அடுத்து கிடைக்கும் சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
மேலும், ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். எஸ்எம்எஸ் சலுகைகளும் இருக்கின்றன. 100 எஸ்எம்எஸ்கள் லிமிட்டில் தினசரிக்கு செய்ய கிடைக்கிறது. இந்த ஜியோ திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த விலைக்கு அதிகப்படியான சலுகைகளையே வாரி வழங்கி இருக்கிறது. 28 நாட்களுக்கு எதிலும் குறை இருக்காது.
ஓடிடி பிரியர்கள் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு இந்த திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதற்கு கம்மியாக மற்றொரு திட்டம் இருக்கிறது. ஆனால், அந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா போன்ற சலுகைகள் கிடைக்காது. வெறும் ஓடிடி மற்றும் 4ஜி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கும்.
ரூ.175 விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது. இது டேட்டா பேக் போலவேத்தான். ஆகவே, 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களுக்கும் 10 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்து ஓடிடி சலுகைகள் கிடைக்கிறது. இதில் 10 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். பேன்கோட் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்காது.
வெறும் ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கும். ஆனால், ஓடிடியுடன் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் 4ஜி டேட்டா போன்ற வழக்கமான சலுகைகளும் வேண்டுமானால், முதலில் பார்த்த ஜியோ ரூ 448 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதுபோன்ற அதிக ஓடிடி சந்தாவுடன் வாய்ஸ் கால்கள் கிடைப்பது ஜியோவில் மட்டும்தான்.


Click it and Unblock the Notifications