அம்பானியின் அடுத்த பிளான் ரெடி; என்னனு கண்டுபிடிங்க பார்ப்போம்.!

அதாவது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

|

தனது சொந்த 4ஜி பீச்சர் மொபைல் போனை (ஜியோபோன்) அறிமுகப்படுத்திய பின்னர், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தயாராகி வருவது போல தெரிகிறது.

அம்பானியின் அடுத்த பிளான் ரெடி; என்னனு கண்டுபிடிங்க பார்ப்போம்.!

அதாவது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 4ஜி சிம் ஸ்லாட் உடன் கூடிய ஒரு லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலோடு சேர்த்து, கூறப்படும் ஜியோ 4ஜி லேப்டாப்பின் சில சுவாரசியமான விஷயங்களும் வெளியாகியுள்ளது.

விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ லேப்டாப்.!

விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ லேப்டாப்.!

இந்த ஜியோ 4ஜி லேப்டாப் பணிக்காக தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பிரபல அமெரிக்க சிப்மேக்கர் நிறுவனமான க்வால்காம் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாம். இதன் விளைவாக இன்-பில்ட் 4ஜி கனெக்ஷன் கொண்ட விண்டோஸ் 10 அடிப்படையிலான ஜியோ லேப்டாப்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் 4ஜி பீச்சர் போன்.!

க்வால்காம் 4ஜி பீச்சர் போன்.!

இந்த க்வால்காம் லேப்டாப்கள் வெளிப்படையாக ஜியோ 4ஜி இணைப்புகளுடன் தொகுக்கப்படும் என்பதும், க்வால்காம் நிறுவனம் ஏற்கனவே ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் உடன் 4ஜி பீச்சர் போன்களை உருவாகும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெக்ஸ்ட் ஜெனரேஷன்

நெக்ஸ்ட் ஜெனரேஷன் "ஆல்வேஸ் கனெக்டெட் பிசிக்கள்.!

இந்த இடத்தில, க்வால்காம் நிறுவனமானது லேப்டாப் கம்ப்யூட்டிங்கின் எதிர்காலமாக அதன் ஸ்னாப்டிராகன் மொபைல் பிளாட்பார்மை கூறி வருவதும், இதன் வழியாக நெக்ஸ்ட் ஜெனரேஷன் "ஆல்வேஸ் கனெக்டெட் பிசிக்கள்" உருவாக்கும் திட்டமுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 835 கொண்டு இயங்கும் லேப்டாப்.!

ஸ்னாப்டிராகன் 835 கொண்டு இயங்கும் லேப்டாப்.!

இதற்கிடையில், சிப் தயாரிப்பாளர் ஆன க்வால்காம், அதன் ஸ்னாப்டிராகன் 835 கொண்டு இயங்கும் லேப்டாப்களை கொண்டு வர இன்டர்நெட் ஆப் திங்ஸ் பிராண்ட் ஆன ஸ்மார்ட்ரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதை ஸ்மார்ட்ரான் நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது.

எப்படி உருவாகும்.?

எப்படி உருவாகும்.?

க்வால்காம் நிறுவனமானது, ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் கொண்டு இயங்கும் பல லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் க்வால்காம் நிறுவனத்தின் மூலம் சக்தியூட்டப்படும் லேப்டாப்கள் உலகளாவிய சந்தைகளை இன்னும் தாக்கவில்லை என்கிற நிலைப்பாட்டில், ஜியோ 4ஜி சிம் உடன் இணைக்கப்பட்ட லேப்டாப் எப்படி உருவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Now Rumoured to Launch Laptops With Cellular Connectivity. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X