Home
News

பிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.!

ஜியோ நிறுவனத்திற்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் விதமாக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது தனது பயனர்களுக்கு ஒவ்வொரு ஐந்து நிமிட வாய்ஸ் கால்களுக்கும் 6பைசாக்களை திரும்பி வழங்குவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தற்சமயம் புதிய சலுகைய அறிவித்துள்ளது அது என்னவென்று பார்ப்போம்.

 ரூ.50 தள்ளுபடியை வழங்கியுள்ளது

ரூ.50 தள்ளுபடியை வழங்கியுள்ளது

அதாவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களில் ரூ.40 மற்றும் ரூ.50 தள்ளுபடியை வழங்கியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 444, மற்றும் ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு முறையே ரூ. 40 மற்றும் ரூ.50 தள்ளுபடியை வழங்கியுள்ளது.

ரூ. 444, மற்றும் ரூ.555

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஆனது அதன் இலவச அழைப்பு நன்மையை நிறுத்து கொள்வதாக தெரிவித்தது, பின்பு மற்றநெட்வொர்க்குகளுக்கு இடையேயான அழைப்புகளுக்கு ஆறு(6) பைசா என்ற கட்டணத்தில் வசூல் செய்துவருகிறது.
அன்மையில் ரூ. 122, ரூ. 333,ரூ. 444, மற்றும் ரூ. 555 உட்பட மொத்தம் நான்கு திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தான் தற்போது ரூ. 444, மற்றும் ரூ.555 திட்டங்களுக்கு மட்டும் இந்த தள்ளுபடியை வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம்.

பேடிஎம் வழியாக

பேடிஎம் வழியாக

அதாவது இந்த தள்ளுபடிகள் பேடிஎம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் ரூ. 444, மற்றும் ரூ. 555 ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து, உங்களின் எண்ணை உள்ளிட்டுவிளம்பர குறியீடு (promocode) SHUBHP44, SHUBHP50 பயன்படுத்த வேண்டும் அப்போது இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரக் குறியீட்டை

அதிலும் விளம்பரக் குறியீட்டை ரூ.444 திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டால், ரூ.555 திட்டத்திற்கு விளம்பரக் குறியீட்டை பயன்படுத்த முடியாது என டெலிகாம் டாக் தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ரூ. 444, மற்றும் ரூ. 555 ரீசார்ஜ் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ரூ.555-ப்ரீபெய்ட்

ரூ.555-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.555-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள்,3000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

 ரூ.444-ப்ரீபெய்ட்

ரூ.444-ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது 2ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ குரல் அழைப்புகள்,1000ஆஃப்-நெட் குரல் நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை 84நாட்களுக்கு வழங்குகிறது. இதனுடன் ஜியோ
ஆப்ஸ்களுக்கான அணுகலையும் பெறமுடியும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio now offering Rs 444, Rs 555 prepaid plans with up to Rs 50 discount: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X