இனி ஜியோ லேண்ட் லைன் கால்களை உங்க ஸ்மார்ட்போனிலேயே பேசலாம்

|

ஜியோ ஃபையர் பயனர்களுக்காக ஒரு லேண்ட் லைன் சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சேவை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனம்

பிரபல தொலைத்தொடர்பு குழுமத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சேவையின் மூலம் பயனர்களின் லேண்ட் லைன் போனுக்கு வரும் அழைப்புகளை, இப்போது தங்களின் ஸ்மார்ட்போன் மூலம் எடுக்க முடியும். மேலும் லேண்ட் லைன் போன் நம்பரில் இருந்து வீடியோ கால் கூட செய்ய இந்த அம்சம் உதவும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ லேண்ட் லைன் அழைப்புகளை ஸ்மார்ட்போனில் எடுக்கும் சேவை

ரிலையன்ஸ் ஜியோ ஃபையர் பிராட்பேண்டு திட்டம் ரூ.699 என்ற விலையில் துவங்குகிறது. இதனுடன் ஒரு இலவச லேண்ட்லைன் இணைப்பும் அளிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் இந்த வசதியை பயன்படுத்தி லேண்ட்லைன் இணைப்பை பயன்படுத்த, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து ஜியோ கால் அப்ளிகேஷனை பயனர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரபூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோ மற்றும் ஆடியோ கால்

வீடியோ மற்றும் ஆடியோ கால்

ரிலையன்ஸ் ஜியோவின் 10 இலக்க லேண்ட்லைன் நம்பரை, இந்த அப்ளிகேஷன் மூலம் கட்டமைக்கப்பட்டால், வீடியோ மற்றும் ஆடியோ கால்களை ஸ்மார்ட்போன் மூலம் எளிதாக பயன்படுத்தலாம். இந்த ஜியோகால் அப்ளிகேஷனில் உள்ள "பிக்ஸ்டு லைன் ப்ரோஃபைல்" என்பதை பயனர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதை செய்த பிறகு, லேண்ட் லைன் நம்பருக்கு பதிலாக ஸ்மார்ட்போன் மூலம் தடையின்றி அழைப்புகளை செய்யவும் பேசவும் முடியும்.

HD தரத்திலான வாய்ஸ் மற்றும் வீடியோ

HD தரத்திலான வாய்ஸ் மற்றும் வீடியோ

இந்த சேவையின் மூலம் ஜியோ பயனர்களுக்கு HD தரத்திலான வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை பயன்படுத்த முடியும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஜியோ லேண்ட் லைன் அழைப்புகளை ஸ்மார்ட்போனில் பதிலளிக்க, ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு அல்லது ஜியோ ஃபைபர் அல்லது ஜியோஃபி இணைப்புகளில் ஏதாவது ஒன்றாவது பயனர்களிடம் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்டு சந்தாக்கள்

ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்டு சந்தாக்கள்

இது தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது ஒரு குழுவினர் ஜியோ நெட்வர்க்கின் சந்தாதாரராக இருக்கும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட குழுவினருக்கு இன்டர்காம் டெலிகாம் அழைப்புகளை ஸ்மார்ட்போன் மூலம் பயன்படுத்தும் வசதியை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்த ஜியோகால் அப்ளிகேஷன் மூலம் ஏதாவது ஜியோ ஃபைபர் உடன் தொடர்புடைய ஒரு ஸ்மார்ட் டிவி மூலம் வீடியோ அல்லது கான்ஃபிரன்ஸ் அழைப்புகளை வீடுகளில் இருந்து செய்யவும் பயனர்களால் முடியும்.

மாத சந்தா ரூ. 699 என்று துவங்கும்

மாத சந்தா ரூ. 699 என்று துவங்கும்

மாத சந்தா ரூ. 699 என்று துவங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்டு பேக்கேஜ் மூலம் 100Mbps என்ற ஒரு குறைந்தபட்ச வேகத்தை பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூலம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபையர் பிராட்பேண்டு சேவை, மாத சந்தாவாக ரூ. 8,499 என்ற அதிகபட்ச சந்தா திட்டங்களை கொண்டது ஆகும். மேலும் ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் இணைப்புகளின் பயனர்கள், இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் இலவச வாய்ஸ் கால்களை செய்யலாம். செட்-அப் பாக்ஸ் உடன் கூட இந்த அளவில்லாத உயர்-வேக டேட்டாவும் அளிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Now Lets You Pick Landline Calls On Your Smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X