ஹேப்பி நியூ இயர் 2026 சலுகையை அறிவித்த Jio.. ரூ.103 முதல் அன்லிமிடெட் சலுகைகள்.. ஜெமினி ப்ரோ AI.. யாரு விடுவா?
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஹேப்பி நியூ இயர் 2026 (Reliance Jio Happy New Year 2026) என்ற தலைப்பில் தற்போது சலுகைகள் மற்றும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஜியோ அறிவித்துள்ள இந்த புதிய சலுகையின் மூலம் கம்மி விலை திட்டங்களில் இனி அதிக ஓடிடி சந்தா பெறமுடியும். அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் ஜெமினி ப்ரோ ஏஐ சேவையைப் பெற முடியும். இப்போது ஜியோ அறிவித்த திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டம் (Super Celebration Monthly Plan)
ஹேப்பி நியூ இயர் 2026 என்ற தலைப்பின் கீழ் தற்போது ஜியோ நிறுவனம் ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிவிஎம்இ (Amazon PVME), சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி +, சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா, பிளானட் மராத்தி (Planet Marathi), ஹோய்சோய் (Hoichoi) ஃபேன்கோட் (Fancode), சாவ்பால் (Chaupal), போன்ற ஓடிடி சந்தா ஜியோ ரூ.500 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.103 ஃப்ளெக்ஸி பேக் (Flexi Pack)
ஜியோ கொண்டுவந்துள்ளது இந்த ரூ.103 ஃப்ளெக்ஸி பேக் ஆனது ஒரு டேட்டா டாப்-அப் திட்டமாகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 5ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் பயனர்கள் பின்வரும் மூன்று பொழுதுபோக்கு தொகுப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இந்தி பேக் (Hindi Pack): ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ் ஆகியவை அடங்கும்.
இன்டர்நேஷனல் பேக் (International Pack): ஜியோஹாட்ஸ்டார், ஃபேன்கோட், லயன்ஸ்கேட் மற்றும் டிஸ்கவரி+ ஆகியவை அடங்கும்.
ரீஜனல் பேக் (Regional Pack): ஜியோஹாட்ஸ்டார், கான்ச்சா லங்கா, சன் நெக்ஸ்ட், ஹோய்சோய் ஆகியவை அடங்கும்
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Hero Annual Recharge) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர தற்போது கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) திட்டத்திற்கான 18 மாத இலவச சந்தாவும் இதில் கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆகும்.


Click it and Unblock the Notifications








