ரிலையன்ஸ் ஜியோ சிறிய வர்த்தகர்களுக்கு உதவ புதிய திட்டம்.!
ஜியோ உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது. இது 83 நாட்களில் 50 மில்லியன் சந்தாதாரர்களை கடந்து,170 நாட்களில் 100 மில்லியன் மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 6 லட்சம் சந்தாதாரர
டெலிகாம் துறையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ, சிறிய வர்த்தகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடைப்பிடிக்க உதவும் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
ஜியோஃபை ஸ்டார்டர் கிட் தற்போது அதிக அளவு 4ஜி டேட்டாவை தந்த வண்ணம் உள்ளது, மேலும் இதன்மூலம் வரம்பற்ற குரல் அழைப்புகளை ஒரு வருடத்திற்கு பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி:
ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள் மூலம் 1,999 ரூபாய்க்கு மொபைல் போன் உதவியுடனும் வியாபாரிகள் பில் செய்ய முடியும். மேலும் ஜியோ ஜிஎஸ்டி மென்பொருள், ஒரு வடத்திற்கு 24 ஜிபி தரவுடன் ஜியோஃபை சாதனம், வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறமுடியும்.

ரிடெய்ல் நிறுவனம்:
வணிகம் செய்து வரும் ரிடெய்ல் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வணிகம் செய்யக் கூடிய மென்பொருள் ஒன்றை ரிலையன்ஸ் ஜியோ ஸ்டார்ட்ர் கிட் மூலம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மிகுந்தளவு வருமானம் வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

தொழில்நுட்ப நிறுவனம்:
ஜியோ உலகில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது. இது 83 நாட்களில் 50 மில்லியன் சந்தாதாரர்களை கடந்து,170 நாட்களில் 100 மில்லியன் மற்றும் ஒரு நாளைக்கு சராசரியாக 6 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ :
2017 மார்ச் 31 ஆம் தேதியன்று ரிலையன்ஸ் ஜியோ 108.9 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இந்தியாவில் குறைந்த நாட்களில் மிகப்பெரிய வளர்சியை கொண்டுள்ள ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.


Click it and Unblock the Notifications