Home
News

ரூ.149 விலை முதல் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், SMS வேண்டுமா? அப்போ இந்த Jio திட்டங்களை பாருங்க..

ரிலையன்ஸ் ஜியோ, நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர், பயனர்களுக்குப் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. மலிவு விலை மற்றும் விலையுயர்ந்த விருப்பங்கள் வரை அனைத்தையும் ஜியோ நிறுவனம் வழங்குகிறது. நீங்கள் 200 ரூபாய்க்குக் கீழ் மிகவும் மலிவு விலையில் ஒரு நல்ல அளவிலான டேட்டாவை வாங்க விரும்பினால். நீங்கள் கண்டிப்பாக ஜியோவின் 1ஜிபி தினசரி டேட்டா திட்டத்திற்குச் செல்லலாம். இது வெறும் ரூ.179 என்ற விலையில் வருகிறது. இதேபோல், விலை ரூ.200 விலைக்குள் கிடைக்கும் திட்டங்களின் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ 179 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்

ஜியோ ரூ 179 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள்

ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.179 ப்ரீபெய்ட் திட்டத்தை 1ஜிபி தினசரி டேட்டாவுடன் 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இது தவிர, ஜியோ வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 தினசரி SMS நன்மைகளை இந்த திட்டத்துடன் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் சலுகையாகப் பயனர்கள் JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் பெறுகிறார்கள். FUP (நியாயமான-பயன்பாடு-கொள்கை) நிறைவடைந்த பின் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

இன்னும் மலிவான விலையில் கூட தினசரி டேட்டா திட்டம் இருக்கிறதா?

இன்னும் மலிவான விலையில் கூட தினசரி டேட்டா திட்டம் இருக்கிறதா?

ஆனால் இது தொலைத்தொடர்பு நிறுவனம் வழங்கும் மிகவும் மலிவு விலையில் 1ஜிபி தினசரி டேட்டா திட்டம் அல்ல என்பதை நீங்கள் இங்குக் கவனிக்க வேண்டும். ரூ.179 விலைக்கு இந்த திட்டமே உங்களுக்கு மலிவு விலையாகத் தெரிந்தால், இதே நன்மையோடு இன்னும் மலிவான விலையில் உங்களுக்கு மற்றொரு திட்டம் கிடைக்கிறது என்று தெரிந்தால் வேண்டாம் என்ற சொல்லப் போகிறோம். ரூ.179 திட்டத்தைப் போலவே அதே பலனை வழங்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவிடம் உள்ளது.

149 ரூபாயில் பெஸ்ட் நன்மை கிடைக்கும் ஜியோவின் திட்டம்

149 ரூபாயில் பெஸ்ட் நன்மை கிடைக்கும் ஜியோவின் திட்டம்

இந்த திட்டத்தின் விலை 149 ரூபாய் ஆகும். முன்னர் பார்த்த திட்டத்தின் அதே நன்மைகளை இந்த திட்டம் ஒரே ஒரு சிறிய வேறுபாட்டுடன் வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் மட்டும் சற்று குறைவாக இருக்கிறது. ஜியோ ரூ 149 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் நன்மைகள் பற்றிப் பார்க்கையில், ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 1ஜிபி தினசரி டேட்டாவுடன் 20 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது.

ரூ.209 விலையில் கிடைக்கும் திட்டத்தின் நன்மைகள்

ரூ.209 விலையில் கிடைக்கும் திட்டத்தின் நன்மைகள்

ரூ.179 திட்டத்தில் வழங்கப்படும் அதே சந்தாக்களைப் பயனர்கள் இந்த திட்டத்துடனும் பெறுகின்றனர். மொபைல் ரீசார்ஜ்களில் அதிக செலவு செய்ய முடியாதவர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. FUP தரவை பயனரால் பயன்படுத்தப்பட்டவுடன் தரவு வேகம் 64 Kbps ஆக குறைகிறது . நீங்கள் இதே பலன்களை இன்னும் சற்று நீண்ட செல்லுபடியுடன் வாங்க விரும்பினால், நீங்கள் ரூ.209 விலையில் கிடைக்கும் விருப்பத்திற்குச் செல்லலாம். இந்த திட்டத்தில், பயனர்கள் 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் 28 நாட்களுக்குச் செயலில் உள்ள சேவை செல்லுபடியாகும்.

4G நெட்வொர்க்குடன் மலிவு விலையில் இணைய பெஸ்ட் திட்டங்கள்

4G நெட்வொர்க்குடன் மலிவு விலையில் இணைய பெஸ்ட் திட்டங்கள்

ரூ.149 மற்றும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்கள் போன்ற அனைத்து நன்மைகளும் ஒரே மாதிரியானது. 4G நெட்வொர்க்குடன் ஆதரிக்கப்படும் இந்தியாவில் இப்போது உண்மையிலேயே கிடைக்கக் கூடிய மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. ரூ.200 விலைக்குள் தினசரி டேட்டா நன்மையுடன், அழைப்பு நன்மை மற்றும் SMS நன்மை ஆகியவற்றை ஒரே பேக் ஆக வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Most Affordable 1GB Daily Data Prepaid Plan From Rs 149 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X