Subscribe to Gizbot

முடிந்தால் டிசம்பருக்குள் ஜியோ சேவையை முடித்துக் கொள்ளுங்கள்: ஏனெனில் 2018-ல்.!

Written By:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மலிவு விலை கட்டண திட்டங்கள் மற்றும் இதர டெலிகாம் நிறுவனங்களுடனான போட்டி ஆகிய அனைத்துமே இந்த 2017-ஆம் ஆண்டிலேயே முடிவடைந்து, அடுத்த 2018-ஆம் ஆண்டில் முதல் அதன் டேட்டா விலை (அதாவது கட்டண திட்டங்களின் விலை நிர்ணயம்) உயர்த்தபடலாம் என்கிறது, ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை.

முடிந்தால் டிசம்பருக்குள் ஜியோ சேவையை முடித்துக் கொள்ளுங்கள்: ஏனெனில்?

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக, நாட்டின் மிகக்குறைந்த விலையின் கீழ் டேட்டா நன்மைகளை வழங்கிவரும் ஜியோ நிறுவனம், இந்திய நுகர்வோர்களை 'டேட்டா கான்சப்ஷன்' தரவரிசையின் உச்சத்திற்கே கொண்டு சென்றது என்பது யாராலும் மறுக்க முடியாது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நிர்பந்தம்

நிர்பந்தம்

மறுகையில், ஜியோ அதன் நுகர்வோர்களை தக்கவைத்துக் கொள்ளவும், இதர நிறுவனங்களின் - தொடர்ச்சியான - போட்டித்தன்மை மிக்க கட்டண திட்டங்களும் தான் ஜியோவை தொடர்ந்து மலிவான விலைக்கே டேட்டாவை வழங்க நிர்பந்தப்படுத்தியுள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடு தான் கடந்த அக்டோபரில் நிகழ்த்த ஜியோ கட்டண திருத்தங்கள்.

விலைகளை உயர்த்தியது

விலைகளை உயர்த்தியது

சரியாக தீபாவளி திருவிழா காலத்தின்போது, ஜியோ அதன் பிரபலமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் கட்டணங்களின் விலைகளை உயர்த்தியது. மறுகையில், ஜியோ ப்ரைம் சந்தா சேவையானது, 2018 ஏப்ரல் மாதம் முடிவடையும் வரை அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குமென கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட உறுதி

கிட்டத்தட்ட உறுதி

ஜியோ அலைகளின் மீது சவாரி செய்யும் இந்தியா, வருகிற 2018 ஆண்டில் முழுவதும் படிப்படியாக வளரும் ஒரு 4ஜி தேசமாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், அந்த வளர்ச்சி காலத்தில் ஜியோ கட்டண திட்டங்களின் விலை உயரும் என்றும், ஒரு வளர்ந்த 4ஜி சக்தியை அடைய சில தேவையான விக்கல்களை நாம் கடந்தே ஆகா வேண்டும் என்றும் ஓப்பன்சிக்னல் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இதயங்களை விரைவாக வென்றது

இதயங்களை விரைவாக வென்றது

ஜியோவின் பரந்த அளவிலான 4ஜி அணுகல், முதல்கட்டமாக இலவசமாக வழங்கப்பட்டதும், பின்னர் மலிவான விலையில் தரவு மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கியதும், நாடு முழுவதிலும் உள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களின் இதயங்களை விரைவாக வென்றது.

4ஜி தரவின் அளவு மட்டுமே 3.9 மில்லியன் டெராபைட்கள்

4ஜி தரவின் அளவு மட்டுமே 3.9 மில்லியன் டெராபைட்கள்

இதன் விளைவாக இந்தியாவின் நடப்பு மொபைல் தரவு சந்தாதாரர்களின் ஊடுருவலானது, தற்போது 40 சதவீதமாக உள்ளது. இது வருகிற 2022-க்குள் 80 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சி ட்ராய் வெளியிட்டுள்ள காலாண்டு தரவு பயன்பாடு அறிக்கை தான். அந்த அறிக்கையானது கடந்த ஜூன் மாதத்தின் முடிவு வரை மொத்தம் 4.2 மில்லியன் டெராபைட்கள் டேட்டா பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 4ஜி தரவின் அளவு மட்டுமே 3.9 மில்லியன் டெராபைட்கள் (டிபி) என்கிறது.

மறுகையில் மொபைல் உற்பத்தியாளர்கள்

மறுகையில் மொபைல் உற்பத்தியாளர்கள்

ஜியோவை சமாளிக்கவும், இருக்கும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் இதர ஆபரேட்டர்கள்ள் முடிந்த அளவு மலிவான விலையில் திட்டங்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்க மறுகையில் மொபைல் உற்பத்தியாளர்கள் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

உயர்த்தும் என்பது உறுதி

உயர்த்தும் என்பது உறுதி

இது மக்களை அதிக அளவில் இணைக்க மற்றும் நாடு முழுவதும் அதன் அதிகரித்துவரும் போக்குகளை பராமரிக்கும் அளவிலான 4ஜி திறன் அடைய உதவும் என்பது எவ்வளவு உறுதியோ, இந்த இடைவெளியில் ஜியோ அதன் கட்டண திட்டங்களை நிச்சயமாக உயர்த்தும் என்பது உறுதி தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Jio May Raise Data Prices in 2018: OpenSignal. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot