பாதுகாப்பில் கோட்டை விட்ட ரிலையன்ஸ் ஜியோ??

By Meganathan
|

இந்திய பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மலிவு விலை 4ஜி நெட்வர்க் கட்டணங்கள், முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் வாய்ஸ் கால் என நாடு முழுக்க ஜியோ பரபரப்பு இன்னும் ஓயவில்லை என்றே கூறலாம்.

பாதுகாப்பில் கோட்டை விட்ட ரிலையன்ஸ் ஜியோ??

ஜியோ வரவு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, அந்நிறுவனங்களையும் டேட்டா கட்டணங்களைக் குறைக்க செய்திருக்கின்றது. போட்டியைச் சமாளிக்க வேறு வழியின்றி பல்வேறு நிறுவனங்களும் பலகட்டங்களில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.

இதே நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோவில் மோசமான நெட்வர்க், கால் டிராப் மற்றும் ஜியோ சிம் அனைவருக்கும் கிடைப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றை விட மிக முக்கியமான விடயம் ஒன்றும் இருக்கின்றது.

இரகசியம்

இரகசியம்

பிரபல ஹேக்கிங் இயக்கமான அனானமஸ் தகவலின் படி ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் சார்ந்த பயனர் தரகவுகளை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இயங்கி வரும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. இது வெளிநாட்டு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்யும் நோக்கில் பயனர்களுக்கு தேவையில்லா மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகளுக்கு வழி செய்யும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்ஸ்

ஆப்ஸ்

மைஜியோ மற்றும் ஜியோ டையலர் போன்று ஜியோ நிறுவனத்தின் ஆப்ஸ்கள் பயனர் தரவுகளை மேட்-மி எனும் நிறுவனத்திற்கு அனுப்புவது தெரியவந்திருக்கின்றது. இதனால் உங்களது காண்டாக்ட் லிஸ்ட், குறுந்தகவல் மற்றும் இதர தரவுகளுக்கு பாதுகாப்பு கிடையாது என அனானமஸ் தெரிவித்துள்ளது.

முதல் முறை இல்லை

முதல் முறை இல்லை

ரிலையன்ஸ் சேவைகள் குறித்து அனானமஸ் இயக்கம் கேள்வி எழுப்புவது முதல் முறை கிடையாது. கடந்த ஆண்டு ஆர்ஜியோ சாட் ஆப் ஜியோ சாட் பயனர் தகவல்களை சீன நாட்டு ஐபி முகவரிக்கு அனுப்புவதாக அனானமஸ் கேள்வி எழுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்து.
மேலும் ஜியோ சார்பில் அனுப்பப்படும் தகவல்கள் எவ்வித என்க்ரிப்ஷன் செய்யப்படாமல் அனுப்பப்படுவதால், யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல் பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பார்க்க முடியும்.

எனினும் இம்முறை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்படுவதாக அனானமஸ் தெரிவித்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கருத்து

கருத்து

அனானமஸ் கருத்திற்கு பதில் அளித்திருக்கும் ஜியோ, "ஜியோ தனது பயனர்களின் தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க முழு கவனம் செலுத்தி வருகின்றது. அதிகளவு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, ஜியோ தனது பயனர்களின் தகவல்களை யாருக்கும் வழங்குவதில்லை.

"ஜியோ சார்பில் பயன்படுத்தப்படும் அனைத்துத் தகவல்களும் பயனர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் நிறுவனத்தினுள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது."

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பகிர்வு

பகிர்வு

ஹேக்கர் இயக்கமான அனானமஸ் இத்தகவல்களை தங்களது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அனைவரும் தங்களது எந்தெந்த தகவல்களை ஜியோ வழங்குகின்றது என்பதை அறிந்து கொள்ளும் வழிமுறைகளையும் அனானமஸ் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio may put you at security risk Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X