ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் VoLTE மொபைல் போன்

By Siva
|

முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4G VoLTE அம்சம் அடங்கிய அழகிய மொபைல் போனை வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் முதலாவது ஆண்டுவிழாவில் அறிமுகம் செய்யவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யும் VoLTE மொபைல் போன்

எக்னாமிக் டைம்ஸ் இதழில் வெளியான செய்திகளின்படி ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழா அறிக்கையின்போது பல புதிய திட்டங்களுடன், கவர்ச்சியான விலையில் இந்த போன் அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அதனை அடுத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கசிந்து வரும் தகவலின்படி இந்த புதிய கவர்ச்சியா போன் வெறும் ரூ.500க்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறாது.

ஏற்கனவே ஜியோ நிறுவனம் விரைவில் 4G அம்சம் உள்ள போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அந்த போனில் லேட்டஸ்ட் டெக்னாலஜியான குவால்கோம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சிப்செட் இருக்கும் வகையில் அமைந்திருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த பொனில் 2.4 இன்ச் ஸ்க்ரீன், 512 MB ரேம், 4GB இண்டர்னல் மெமரி, மைக்ரோ கார்டு வசதி, 2MP பின்கேமிரா மற்றும் VGA செல்பி கேமிரா என அனைத்து வசதிகளும் இருக்கும்

மேலும் கடந்த மே மாதத்தில் மிக வேகமான 4G நெட்வொர்க் வழங்கிய நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் 108.9 மில்லியன் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ பெற்றிருந்த நிலையில் அவர்களில் 72 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஜியோவில் 83 நாட்களில் 50 மில்லியன் வாடிக்கையாளர்களும், 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களும் இணைந்தது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

அதாவது தினமும் ஜியோவில் ஆறு லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக இணணந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 108.9 வாடிக்கையாளர்களுடன் வெற்றிநடை போட்டு வரும் ஜியோ, இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி என்ற உச்சத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
The company has Reliance Jio has once again been declared as the fastest 4G network in the month of May.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X