Home
News

மகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா., அமேசான், பிளிப்கார்டு போட்டியாக ஜியோமார்ட் அறிமுகம்.!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவையை தொடங்கிய காலக்கட்டத்திலேயே பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் சரிக்கு சமமாக திகழ்ந்ததோடு, காலப்போக்கில் அனைத்து நிறுவனங்களுக்கும் நிகரான போட்டி நிறுவனமாக உருவெடுத்தது.

அமேசான், பிளிப்கார்ட்-க்கு போட்டி

அமேசான், பிளிப்கார்ட்-க்கு போட்டி

இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சேவை புரிந்து வரும் நேரத்தில் ரிலையன்ஸ் மார்ட் என்ற நிறுவனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய ஜியோ மார்ட் சேவை

புதிய ஜியோ மார்ட் சேவை

புதிய ஜியோ மார்ட் சேவை இந்தியாவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் என கருதப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சேவை மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது.

புதிய ஆன்லைன் வர்த்தக சேவை

புதிய ஆன்லைன் வர்த்தக சேவை

புதிய ஆன்லைன் வர்த்தக சேவையாக ஆஃப்லைன் டூ ஆன்லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த செயல்பாட்டில் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தொழில்நுட்ப உதவியுடன் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள வைக்க ரிலையன்ஸ் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி சீனாவின் அலிபாபா நிறுவனம் போல் இந்தியாவில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ மார்ட் ஆப் உருவாக்கும்

ஜியோ மார்ட் ஆப் உருவாக்கும்

வலைத்தளம் மட்டுமின்றி ஜியோ மார்ட் ஆப்-பை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் சுமார் 50,000-க்கும் அதிகமான மளிகை பொருட்களை வாங்க முடியும். மேலும் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு இலவசமாக டெலிவரி செய்யப்படுகிறது.

முதற்கட்டமாக மும்பையில் துவக்கம்

முதற்கட்டமாக மும்பையில் துவக்கம்

ரிலையன்ஸ் ரீடெயில் சார்பில் ஜியோ சந்தாதாரர்களுக்கு ஜியோமார்ட் பற்றிய தகவல்கள் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்டமாக மும்பையில் துவங்கப்பட்டுள்ள ஜியோமார்ட் சேவை படிப்படியாக பிற பகுதிகளிலும் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance jio mart launched in india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X