ரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.??
செப்டம்பரில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சலுகைகளுக்கு டெலிகாம் சந்தையில் பரபரப்பு ஓயவில்லை. இந்நிலையில் புதிய மாஸ் அறிவிப்பு எது சார்ந்து இருக்கும் என்பதை இங்குப் பாருங்கள்..
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி எல்டிஇ சேவைகள் இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் அந்நிறுவனம் வரும் வாரங்களில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவிக்க இருக்கிறதாம்.
இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் நீட்டிப்புக் குறித்துத் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி டிசம்பர் 28 ஆம் தேதி அறிவிக்கப்படலாம். டிசம்பர் 28 ஆம் தேதி திருபானி அம்பானியின் பிறந்த நாள் என்பதால் இந்தத் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்..

வெல்கம் ஆஃபர்
இது குறித்து வெளியான தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகளை வழங்கும் வெல்கம் ஆஃபர் காலம் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவிக்கிறது. வெல்கம் ஆஃபர் மூலம் 4ஜி எல்டிஇ டேட்டா மற்றும் வாய்ஸ் கால் போன்றவை இலவசமாக வழங்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

மார்ச் 2017
முன்னதாகப் பலமுறை கூறப்பட்டு வந்த மார்ச் 2017, என்ற அதே காலம் தான் இம்முறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ பயனர்கள் இலவச சேவைகளை மார்ச் மாதம் 2017 வரை பயன்படுத்த முடியுமாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வாடிக்கையாளர்கள்
எனினும் இலவச சேவை நீட்டிப்பு பழைய பயனர்களுக்கும் வழங்கப்படுமா அல்லது புதிய ஜியோ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. தற்சமயம் வரை அனைத்து ரிலையனஅஸ் ஜியோ பயனர்களும் இலவச சேவைகளை டிசம்பர் 31, 2016 வரை பயன்படுத்த முடியும்.

டிசம்பர் 28
ஜியோ பிரியர்கள் இது போன்ற அறிவிப்பு நிச்சயம் வருமா என்பதை அறிந்து கொள்ள டிசம்பர் 28, வரை காத்திருக்க வேண்டும். ஏற்கனவே மார்ச் 2017 வரை ஜியோ இலவச சேவைகள் தொடரும் என்ற ரீதியில் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளியாகின.

மோட்டிலால்
டெலிகாம் சந்தை வல்லுநரான மோட்டிலால் ஓஸ்வால் வெளியிட்ட அறிக்கையின் படி, '100 மில்லியன் என்ற வாடிக்கையாளர் எண்ணிக்கையை அடைய ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications