ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன் ரூ.199 மட்டுமே??

Written By:

முதல் மூன்று மாதங்களுக்கு அன்-லிமிட்டெட் இலவச 4ஜி இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் காலிங் சேவை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அறிவித்து அதற்கான பிரீவியூ சேவையையும் வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தச் சேவை குறித்து பல்வேறு செய்திகள் இணையத்தில் வெளியாகின்றன.

இதையும் பாருங்கள் : பெரும்பாலான 4ஜி கருவிகளுக்கு ஜியோ சிம் விநியோகம்.!?

மலிவு விலையை விடக் குறைந்த விலையில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்க பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவையின் கட்டணங்களை குறைத்து வரும் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ புதிய சேவைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் சேவை ரூ.199 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுவதாக வாட்ஸ்ஆப் செயலியில் தகவல் பரவி வருகின்றது.

தகவல்

தகவல்

உண்மையில் இந்தத் தகவல் போலியான ஒன்று என்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.199க்கு சேவை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சலுகை

சலுகை

ரூ.199 மட்டும் செலுத்தி புதிய லைஃப் ஸ்மார்ட்போன் மற்றும் அன்-லிமிட்டெட் இலவச 4ஜி இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் காலிங் சேவையை பெறுங்கள் என்றவாரு வாட்ஸ்ஆப் செயலியில் குறுந்தகவல்கள் பரப்பப்படுகின்றது.

லின்க்

லின்க்

இந்த குறுந்தகவலுடன் "reliance-4g-lyf.com" என்ற இணையதள முகவரியும் வழங்கப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ இணையதளம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்து

ஆபத்து

தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லா பிரச்சனைகளை தவிர்க்க இது போன்ற இணையதளங்களை கிளிக் செய்யாமல் இருப்பது நல்லது.

போட்டி

போட்டி

வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களில் வந்த லின்க் கிளிக் செய்தவுடன் போட்டி ஒன்றில் பங்கேற்க கூறும் தகவல் மற்றும் பெயர், மொபைல் நம்பர், ஸ்மார்ட்போனின் நிறத்தினை தேர்வு செய்யக் கோரும் திரை காணப்பட்டது.

பகிர்வு

பகிர்வு

அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்ததும் இந்தத் தகவலினை 8 வாட்ஸ்ஆப் குழுக்களுடன் பகிர்வு செய்ய கோரியது. இது முடிந்ததும் குறிப்பிட்ட செயலி ஒன்றினை டவுன்லோடு செய்து ஆக்டிவேட் என்ற பட்டனை கிளிக் செய்ய கோரியது.

கூப்பன் கோடு

கூப்பன் கோடு

இது முடிந்ததும் ஆக்டிவேஷன் கோடினை பதிவு செய்யக் கோரியது. இவ்வாறு செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்வது வீண் பிரச்சனைகளுக்கு வழி செய்யும் என்பதால் இந்த வழிமுறையைப் பின்பற்றவில்லை.

போலி

போலி

இது போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது கணினி அல்லது ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை பரப்பும் என்பதால் இந்த லின்க் மற்றும் போலி சலுகைகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம் எனக் கூறப்படுகின்றது.

சேவை

சேவை

உண்மையில் ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பெற லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களை ரூ.2,999 முதல் ரூ.20,000 வரையிலான கருவிகளை வாங்க வேண்டும். இதோடு ஜியோஃபை எனும் கருவியை ஜியோ சிம் கார்டுடன் வழங்குகின்றது. இந்தக் கருவியை பயன்படுத்தி ஜியோ 4ஜி சேவையைப் பயன்படுத்த முடியும்.

நீட்டிப்பு

நீட்டிப்பு

இதோடு தற்சமயம் வரை ஜியோ 4ஜி சேவையானது சாம்சங், எல்ஜி மற்றும் ஆப்பிள் பிரான்டு 4ஜி கருவிகளில் பயன்படுத்த முடியும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோ சிம் கார்டுகள் ரிலைடன்ஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி / ரிலையனஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதோடு இரண்டு லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன் கருவிகள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் பாருங்கள்

இதையும் பாருங்கள்

சாம்சங் போனுடன் இலவச ஜியோ சிம் பெறுவது எப்படி?

இலவச ஜியோ சிம், 4ஜி அன்லிமிட்டட் டேட்டா பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Reliance Jio and Lyf phone at Rs 199? Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot