ஜியோவின் முகத்திரையை கிழித்த டிராய் அறிக்கை; ஜியோவாசிகளுக்கு ஷாக்.!

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சராசரியான பதிவிறக்க வேகம் 7.41 எம்பிபிஎஸ் என்று பதிவாகியுள்ளது.

|

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகரங்களில் டிராய் நிகழ்ததியதொரு சுதந்திரமான 4ஜி டிரைவ் சோதனையில், பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய இரு டெலிகாம் நிறுவனங்களும் புரட்சிமிக்க ரிலையன்ஸ் ஜியோவை புரட்டிப்போட்டது மட்டுமின்றி, போட்டியாளரான ஐடியா செல்லுலாரையும் பின்தள்ளியுள்ளது.

ஜியோவின் முகத்திரையை கிழித்த டிராய் அறிக்கை; ஜியோவாசிகளுக்கு ஷாக்.!

சோதனை அறிக்கையின்படி, பார்தி ஏர்டெல் ஆனந்தின் சராசரி பதிவிறக்க வேகத்தை 9.64 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது ஜியோவின் 4ஜி பதிவிறக்க வேகத்தை விட 40% வேகமாக, அதாவது 6.57 எம்பிபிஎஸ் அதிகமாக இருந்தது.

ஐடியா செல்லுலார் பதிவிறக்க வேகம்.?

ஐடியா செல்லுலார் பதிவிறக்க வேகம்.?

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சராசரியான பதிவிறக்க வேகம் 7.41 எம்பிபிஎஸ் என்று பதிவாகியுள்ளது. இந்த டிரைவ் டெஸ்டின் ஒரு பகுதியாக வோடபோனின் 4ஜி நெட்வொர்க்கும் இருந்தது.

ஆறு நகரங்களில் மட்டுமே.!

ஆறு நகரங்களில் மட்டுமே.!

இருப்பினும், சோதனை நிகழ்ந்த பத்து நகரங்களில் ஆறுகளில் மட்டுமே வோடபோன் அதன் எல்டிஇ சேவைகளை வழங்குகிறது. இதன் விளைவாக, அதன் வேகம் சார்ந்த சோதனையானது ஆறு நகரங்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு அந்த விவரங்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் வேகத்தை விட அதிகம்.!

ஏர்டெல் நிறுவனத்தின் வேகத்தை விட அதிகம்.!

அதன்படி வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகம் - 10.5 எம்பிபிஎஸ் ஆகும். இது பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வேகத்தை விட அதிகமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

எங்கெல்லாம் சோதனை நடந்தது.?

எங்கெல்லாம் சோதனை நடந்தது.?

இந்த சோதனைகள் நிகழ்த்தப்பட்ட இடங்களின் விரவங்கள் பின்வருமாறு: ஹரியானாவில் உள்ள பிவானி, உத்திர பிரதசத்தின் கிழக்கில் உள்ள கான்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா, பிஹாரில் உள்ள பாட்னா மற்றும் ராஞ்சி, மத்திய பிரதேசத்தில் உள்ள ராய்பூர் ஆகிய இடங்களிலும், கோயம்புத்தூர், கோழிக்கோடு, புதுச்சேரி மற்றும் விஜயவாடா.

ரிலையன்ஸ் ஜியோ பதிவிறக்க வேகம்.?

ரிலையன்ஸ் ஜியோ பதிவிறக்க வேகம்.?

மைஸ்பீட் பயன்பாட்டின்படி, ரிலையன்ஸ் ஜியோவின் 20.3எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவிறக்க வேகமானது 6.5எம்பிபிஎஸ் ஆக குறைந்துள்ளது. அதே மைஸ்பீட் பயன்பாட்டின்படி, பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் பதிவிறக்க வேகமானது முறையே 8.9 எம்பிபிஎஸ் மற்றும் 8.2 எம்பிபிஎஸ் என்று பதிவாகியுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஜியோ, அமைதியான முறையில் கீழ்நோக்கி செல்கிறது.!

ஜியோ, அமைதியான முறையில் கீழ்நோக்கி செல்கிறது.!

இந்த அறிக்கையின் வழியாக, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஒரு அமைதியான முறையில் கீழ்நோக்கி செல்வது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல தொலைத்தொடர்பு அப்டேட்ஸ்களை உடனுக்குடன் அணுக தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Loses to Airtel and Vodafone in Trai’s Independent 4G Drive Tests. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X