"என்னையே ஏமாத்துறீங்களா.?" - பயனர்கக்கு 'செக்' வைத்த அம்பானி.!

|

ஜியோ, அதன் கட்டண சேவைகளை அறிமுகம் செய்த பின்னர் கூட, வழங்கி வந்த இலவச சலுகைகள் மீதான எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்தாத அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது அதன் நன்மைகள் மீதான கட்டுப்பாடுகளை நிகழ்த்த தொடங்கியுள்ளது.

டேட்டா மற்றும் வோல்ட் சேவைதான், ஜியோவின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக திகழ்கிறது. ஏர்டெல் உட்பட இதர பெரும்பாலான நிறுவனங்கள், அதிரடியான மலிவு விலை டேட்டா வழங்குவதும் மற்றும் வோல்ட் சேவைகளுக்கும் அவசர அவசரமாக களமிறங்குவதே அதற்கு சாட்சி. அது தெரிந்தும் ஜியோ அதன் வோல்ட் அழைப்புகள் மீதான கட்டுப்பாட்டை நிகழ்த்தியுள்ளது. என்ன கட்டுப்பாடு.? இதன் பின்னணி என்ன.?

அழைப்புகள் வரம்பிற்கு உட்பட்டிருக்கின்றன

அழைப்புகள் வரம்பிற்கு உட்பட்டிருக்கின்றன

ஜியோ அதன் பயனர்களுக்கு வழங்கி வந்த வரம்பற்ற அழைப்பு நன்மை மீது வெறும் 300 நிமிடங்கள் மட்டுமே "வரம்பற்ற அழைப்புகள்" என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சில ஜியோ பயனர்கள் இந்த அழைப்பு நன்மையை தவறாகப் பயன்படுத்துகின்ற காரணத்தினால் பயனர்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய அழைப்புகள் வரம்பிற்கு உட்பட்டிருக்கின்றன.

தவறாக பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே

தவறாக பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே

மற்றும் வெளியான அறிக்கையின்படி, இந்த அழைப்பு நன்மைகளுக்கான வரம்பு அனைத்து பயனர்களுக்கும் அல்ல. ஜியோ நெட்வொர்க்கைத் தவறாக பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமான அழைப்புகள்

நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமான அழைப்புகள்

அதாவது சில பயனர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமான அழைப்புகள் செய்வதன் மூலம் "வரம்பற்ற அழைப்புகள்" அம்சத்தை தவறாக பயன்படுத்துவதாக அறிக்கை கூறுகிறது. எனவே, குறிப்பிட்ட ஜியோ பயனர்கள், அதிகப்படியான ஜியோ அழைப்பு அம்சத்தை உபயோகப்படுத்தாமல் இருக்கும்படியான குரல் அழைப்பு கட்டுப்பாட்டை ஜியோ நிகழ்த்தியுள்ளது.

வாராந்திர வரம்பு பற்றிய அறிவிப்புகள் ஏதுமில்லை

வாராந்திர வரம்பு பற்றிய அறிவிப்புகள் ஏதுமில்லை

மேலும், இப்போது வரையிலாக குரல் அழைப்புகளின் மீதான தினசரி வரம்பானது நாள் கணக்கில் மட்டுமே செயல்படுத்தப்படும் ஆனால் வாராந்திர வரம்பு பற்றிய அறிவிப்புகள் ஏதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜியோ தனது 4ஜி தரவிற்கான வரம்பு முடிந்த பின்னர், டேட்டா வேகத்தை எவ்வாறு குறைத்து அறிவித்ததோ, அதேபோன்று தான் குரல் அழைப்புகளின் மீதன வரம்பையும் தற்போது ஏற்படுத்துதியுள்ளது.

தவறாக பயன்படுத்துவதை அறிந்த ஜியோ

தவறாக பயன்படுத்துவதை அறிந்த ஜியோ

செப்டம்பர் 2016-ல தொடங்கப்பட்டபோது, ​​ஜியோ அதன் வாடிக்கையாளர்கள் இலவச வரம்பற்ற 4ஜி தரவரிசைகளை வழங்கியது. பயனர்கள் வெளிப்படையாக வரம்பற்ற தரவு அம்சத்தை தவறாக பயன்படுத்துவதை அறிந்த ஜியோ நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவு வரம்பையும், அது முடிந்த பின்னர் டேட்டா வேகம் குறையும் என்றும் அறிவித்தது.

Best Mobiles in India

English summary
Reliance Jio limits daily calls to 300 minutes for some users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X