செலவை குறைக்க 5000 ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு வருமானத்தில் வீழ்ச்சி அடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ நிறுவனம் ஒருசில நிரந்தர ஊழியர்களை மட்டும் வைத்து கொண்டு பெரும்பாலான ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் செலவினங்கள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

எக்னாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி இந்த நடவடிக்கையால் சுமார் 5000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களில் 500 முதல் 600 தொழிலாளர்கள் நிரந்தர பணியில் இருப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டு வருமானத்தில் வீழ்ச்சி அடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

பாதிப்பின் பெரும்பகுதி
இந்த பாதிப்பின் பெரும்பகுதி பயனாளிகள் பக்கம் காணப்படுகிறது என்றும் இன்னொரு பக்கத்தில் சப்ளை செயின், மனித வளங்கள், நிதி, நிர்வாகம் மற்றும் நெட்வொர்க் பக்கம் இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது சேவைகளை பயனாளிகளுக்கு சிறப்பாக அளிக்கும் வகையிலும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில்
எங்களது பல பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட சம்பளத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், பணியாளர்களின் சம்பள செலவை குறைப்பதற்காக மட்டுமே இந்த நடவடிக்கை என்றும், இதனால் சேவையில் எந்தவித குறைபாடும் இருக்காது என்றும் கூறினார். இருப்பினும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை நிறுவனம் சரியாக குறிப்பிடவில்லை

15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை
இந்தியா முழுவதும் இதுவரை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் இந்த எண்ணிகையை விட அதிக எண்ணிக்கையில் ஜியோவில் பணிபுரிவார்கள் என்றும், மூன்றாம் பார்ட்டி பணியாளர்களும் ஜியோவுக்காக பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வட்டி, வரி, தேய்மானம்
ஜனவரி முதல் மார்ச் காலாண்டில், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கூடுதல் செலவினங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஜியோவின் வருமானம் இந்த காலாண்டில் 5 அடிப்படை புள்ளிகளால் 39% ஆக வீழ்ச்சியடைந்தது, மொத்த செலவினங்கள் கிட்டத்தட்ட 8% அதிகரித்துள்ளது. குறிப்பாக உயர் நெட்வொர்க்கின் செலவுகள், நிதி செலவுகள், மற்றும் தேய்மானம் மற்றும் இதர செலவுகளால் கூடுதல் செலவு என்று அறிக்கை கூறுகிறது

சிறந்த சேவை தொடரும்
பொதுவாக, ஊழியர்களின் செலவினங்கள் 5-6 சதவீதமாக இருக்கும். ஆனால் ஊழியர்களின் செலவினங்களை குறைப்பதன் மூலம் பெரும்பாலான நிறுவனங்கள் சேவையிலும் கோட்டைவிட்டு விடும். ஆனால் ஜியோ ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதன் மூலம் சிறந்த சேவை தொடரும் என்று கூறப்படுகிறது

மத்திய அரசின் ஆதரவைப் பெறுகிறது
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒருசில நெருக்கடி இருந்தாலும், ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் நுழைந்த பிறகு இலாபம் சம்பாதிக்கும் ஒரே நிறுவனமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை சேவை நிறுவனங்கள் போல் இல்லாமல் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) போல் ஜியோ நிறுவனம் மத்திய அரசின் ஆதரவைப் பெறுகிறது. குறிபபக ஜியோ ரூ 2 லட்சம் கோடியை கடன் பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமே இதைவிட குறைந்த கடன்களையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

$50 பில்லியன்
முகேஷ் அம்பானியின் ஜியோவின் $50 பில்லியன் தொலைத்தொடர்பு துறையின் சந்தையில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக கடந்த செப்டம்பர் 2016 ல் நுழைந்தது. பெரும் நிதி அடிப்படையை கொண்ட அம்பானி, குறைபாடுகள் இன்றி பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறார். இது மற்ற போட்டியிடும் நிறுவனங்கள் கொடுக்கும் விலைகளை குறைக்க கட்டாயப்படுத்தியது.

பல தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்
ரிலையன்ஸ் ஜியோவின் வித்தியாசமான உத்திகள் மொத்த தொலைத் தொடர்புத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில்துறையில் நீடிப்பதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்தன, இதனால் பல தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 2017 ஆம் ஆண்டில் மட்டும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 75,000 பணியாளர்கள் வேலை இழந்தனர். இந்த நெருக்கடியின் காரணமாக அடுத்த ஆண்டுகளில் மேலும் பலர் தொலைத் தொடர்பு துறையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
2008-09 ஆண்டு முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கிய பின்னர் 2008-16 ஆண்டுக்கு பின் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஆண்டு வருவாய் ரூ.1.93 டிரில்லியிலிருந்து 1.88 டிரில்லியன் ரூபாயாக சரிந்தது,
இந்த நஷ்டங்களை சமாளிக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்துவிட்டன, "பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் பி அபிநானு முன்னதாகவே நீக்கப்பட்டார். இது தொலைத்தொடர்பு துறையில் தொழிலாளர்கள் பிரிவை பாதித்தது, இது நேரடியாக 2.2 மில்லியன் மக்களுக்கு பாதிக்கப்பட்ட நேரத்தில்தான் அவர்களுக்கு ஜியோ கைகொடுத்தது.

9.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் டெலிகாம் ரெகுலேட்டரி ஆணையத்தின் தகவலின்படி 2019 மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முறையே 15.1 மில்லியனாகவும், 14.5 மில்லியனாகவும் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications