மீண்டும் ஜியோ அதிரடி : 2 நீண்ட நாள் பிளானை அறிவித்தது.!
நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. தற்போது வரை அதிக வாடிக்கையாளர்களை பெற்று தெறிக்கவிடும் நிறுவனமாக ஜியோ இருக்கின்றது.
நீண்ட நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் இரண்டு திட்டங்களை ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. தற்போது வரை அதிக வாடிக்கையாளர்களை பெற்று தெறிக்கவிடும் நிறுவனமாக ஜியோ இருக்கின்றது.

மேலும், ஜியோ நிறுவனம் வழங்கி வரும் சலுகையால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது மற்ற நிறுவனங்களுக்கு இது ஆப்பு வைக்கும் ஆப்பராக மாறியது.
இந்நிலையில் மேலும், இரண்டு நீண்ட நாள் வேலிட்டில் வழங்கும் அறிவிப்பை ஜியோ நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

ஜியோ நிறுவனம்:
ஜியோ நிறுவனம் குறைந்த காலத்தில் இந்திய சந்தையில் நுழைந்தது. மேலும் பல்வேறு அதிரடி திட்டங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இந்தியாவின் பொது மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் நிறுவனமாகவும் இது இருக்கின்றது.

இலவச திட்டங்கள்:
ஜியோ நிறுவனம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், இலவச ரோமிங், ரிங்டோன், மிஸ்டு கால் அலர்ட், காலர் டியூன் உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது.
இதனால் இந்தியாவில் அதிகளவில் வாடிக்கையாளர்களை பெற்றது.

வோல்டு இ ரோமிங் சேவை:
இந்தியாவில் முதல் முறையாக வோல் இ ரோமிங் என்படும் அதிவேக இணைய சேவையை ஜியோ நிறுவனம் வழங்கியது. மேலும், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்தின் போது, கால் டிராப் பிரச்னை ஏற்படாத ஓரே நிறுவனம் என்று டிராய் நிறுவனமும் அறிவித்தது.
ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியால் மற்ற நிறுவனங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போயின.

ரூ.49ல் சலுகை:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.

இரண்டு புதிய சலுகை:
ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் நீண்ட வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.594 சலுகை:
ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

ரூ.297 சலுகை:
ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

தெறிக்கவிட்டுள்ளது:
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியானது. அதில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications