ஜியோ பயனர்கள் குஷி: பெஸ்டான ஜியோ போன் 2021 ஆஃப்பர் விபரம் இதோ..
ஜியோ தனது பயனர்களுக்கு இந்த ஆண்டின் மிக சிறந்த ஜியோ போன் சலுகையை அறிவித்துள்ளது. '2 ஜி-முக்த் பாரத்' இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக, ஜியோ ஒரு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜியோபோன் மற்றும் அதன் சேவைகளை சுமார் 300 மில்லியன் பியூச்சர் போன் பயனர்களுக்கு வழங்கவிருக்கிறது.

மேலும், இந்த திட்டமானது அடுத்த 2 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆகையால், நீங்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. அதேபோல், ரூ. 1,499 திட்டத்தை ஒரு பயனர் தேர்வு செய்யும் போது மேலே உள்ள அதே நன்மைகளைப் பெறுகிறனர், ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பதிலாக, நீங்கள் அதை ஒரு வருடத்திற்கு மட்டுமே அனுபவிக்க முடியும்.
ஜியோவைப் பொறுத்தவரை, இதே நன்மைக்காக, வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளில் 2.5 மடங்கு அதிகமாக செலவு செய்கின்றனர். பியூச்சர் போன் மற்றும் 2 ஆண்டு சேவைக்காக, பிற நெட்வொர்க்குகளில் உள்ள பயனர் 5,000 ரூபாய் செலவழிக்கின்றனர். அதே நேரத்தில் ஜியோ விஷயத்தில் பயனர் ரூ. 2000 வரை மட்டுமே செலவு செய்யவேண்டியுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
2 ஆண்டுகளாக வாய்ஸ் கால் சேவைக்காக, ஒருவர் குறைந்தது ரூ.149 ஐ 24 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்கின்றனர். இதனால் மொத்தமாக ரூ.3600 அவர்களுக்குச் செலவாகிறது. மேலும், ஒரு பியூச்சர் போனின் விலை குறைந்தபட்சம் ரூ.1200 - ரூ .1500க்குள் கிடைக்கிறது. எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கான சிறந்த நன்மை இதுவாக தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications