வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையில் ஜியோ நிறுவனம்.! ஏர்டெல்லை சாய்ந்தது.!

ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட் இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது ஏர்டெல்லை விட இரு மடங்கு வேகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுஏர்டெல் நிறுவனத்தை

|

ஜிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரயில், சாலை போக்குவரத்தின் போதும், கால் டிராப் ஆகாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியதாக டிராய் ( இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) அறிவித்து இருந்தது.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் சிறந்த சேவை வழங்குவதில்லை என்று தெரிவித்தது டிராய்.

வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையில் ஜியோ நிறுவனம்.!  ஏர்டெல்லை  சாய்ந்தது.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட் இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இது ஏர்டெல்லை விட இரு மடங்கு வேகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு வேகத்தில் இருக்கும். இதனால் ஏர்டெல்லை வெட்டி சாய்துள்ளது.

இந்திய சந்தையில் ஜியோ:

இந்திய சந்தையில் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்து குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் திட்டங்களால் ஏராளமானோர் வாடிக்கையாளர்களா கிடைத்து வருகின்றனர்.

இலவச ரோமிங், மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், தினமும் 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவைகளையும் வழங்கி வருகின்றது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் 4 ஜி சேவை:

ஜியோவின் 4 ஜி சேவை:

ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் போதே 4 ஜியில் சேவையை துவங்கியது. இதனால் அதிவேக இணைய தளத்தையும் மக்களுக்கு வழங்கி தனது ஆதிக்கத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் நெ.1 இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஜியோ நிறுவனம் பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகின்றது.

ஜப்பான் நிறுவனத்துடன் கைகோர்ப்பு:

ஜப்பான் நிறுவனத்துடன் கைகோர்ப்பு:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ கே.கே.டி.ஐ. நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதன் மூலம் கே.கே.டி.ஐ. நிறுவனம் தனது சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் முதல் ஜப்பான் நிறுவனமாக இருக்கிறது.

 4. வோல்ட்இ ரோமிங் சேவை:

4. வோல்ட்இ ரோமிங் சேவை:

வோல்ட்இ சர்வதேச ரோமிங் சேவையை வழங்கும் உலகின் நான்கு நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஜியோ சேவையை பல்வேறு நாடுகளுக்கும் வழங்கும் திட்டத்தின் ஒருபகுதியாக புதிய சேவையை வழங்கி இருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

ஐபி நெட்வேர்க் சேவை:

ஐபி நெட்வேர்க் சேவை:

வோல்ட்இ சார்ந்த சர்வதேச ரோமிங் மூலம் சர்வதேச பயணர்கள் ஜியோவின் உலகத்தரம் வாய்ந்த அனைத்து IP நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடியும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என தெரிவித்துள்ளது.

ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளும்:

ஏர்டெல்லை பின்னுக்கு தள்ளும்:

கடந்த 20 மாதங்களாக ஜியோவின் அதிவேக நெட்வொர்க் என்றும், ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 20.06 எம்.பி. ஆக இருக்கிறது என அந்நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது. அக்டோபர் மாத நிலவரப்படி ஜியோவின் டவுன்லோடு வேகம் ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

இந்திய பயனர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்து செல்லும் அனைத்து பயனர்களுக்கும் அதிவேக டேட்டா மற்றும் வாய்ஸ் அனுபவத்தை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் கே.கே.டி.ஐ. வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க்கிற்கு வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jio launches India first VoLTE international: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X