கிரெடிட் கேரி பார்வேட் சலுகையை அறிவித்த ஜியோ நிறுவனம்.! முழுவிவரம்.!

|

ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு முகேஷ் அம்பானி தலைமயிலான ஜியோ நிறுவனம் carry-forward your credit limit என்ற வசதியைக் கொண்டுள்ளது.

போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவையில்

இந்த வசதி ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவையில் பயனர்களுக்கு தற்போதுள்ள கிரெடிட் லிமிட்டை பெற அனுமதிப்போடு சேர்ந்து எந்த விதமான செக்யூரிட்டி டெபாசிட்டுற்கும் வேலை இல்லாமல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்

அன்மையில் புதிய ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பைப் பெறும் பயனர்களுக்கு எவ்வாளவு பாதுகாப்பு வைப்புத் தொகையை( செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும் என்கிற விவரங்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வலைதளத்தில் வெளியானதற்கு பின்னர், ஜியோ நிறுவனம் இந்த புதிய நடவடிக்கையை செயல்படுத்தியது.

ன்றால், கடந்த மாதம்

தெளிவாக கூறவேண்டும் என்றால், கடந்த மாதம் போஸ்ட்பெய்ட் பிளஸ் சேவையை அறிவிக்கும் போது இந்த ஆபரேட்டர் எந்தவொரு பாதுகாப்பு வைப்பையும் அறிவிக்கவில்லை, சமீபத்தில் தான் அது சார்ந்த அறிவிப்பை டிராய் நிகழ்த்தியது.

பேங்க்ல இருந்து பேசுறேன் ஒடிபி நம்பர் சொல்லுங்க சார்.! நம்பி சொன்னவருக்கு ரூ.10.30லட்சம் இழப்பு.!பேங்க்ல இருந்து பேசுறேன் ஒடிபி நம்பர் சொல்லுங்க சார்.! நம்பி சொன்னவருக்கு ரூ.10.30லட்சம் இழப்பு.!

அறிமுகத்தின் விளைவாக,

மேலும் இந்த புதிய அறிமுகத்தின் விளைவாக, ஏற்கனவே கிரெடிட் லிமிட் கொண்டுள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்-க்கு மாறும் போது எந்த விதமான பாதுகாப்பு வைப்புத்தொகையும் செலுத்த தேவையில்லை, மேலும் அவர்களின் தற்போதைய கிரெடிட் லிமிட்டும் நுகர்வோருக்கு வழங்கப்படும்.

உறுதிபடுத்த அவர்கள் இருக்கும் ஆபரேட்டரின்

இந்த புதிய அம்சத்தை பெற தற்போதுள்ள போஸ்ட்பெய்ட் பயனர்கள் தங்கள் போஸ்ட்பெய்ட் எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வழியாக 88501-88501 க்கு "Hi" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்பு தற்போதுள்ள கிரெடிட் லிமிட்டை உறுதிபடுத்த அவர்கள் இருக்கும் ஆபரேட்டரின் போஸ்ட்பெய்ட் பிளஸ்-ஐ பதிவேற்றுமாறு கேட்கப்படுவார்கள். அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் எந்தவொரு ஜியோ ஸ்டோருக்கும் செல்வதின் வழியாக ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிம் கார்டை பெற முடியும் அல்லது வீட்டிற்க்கே கூட டெலிவரி செய்ய வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அம்சம் ஏற்கனவே உள்ள

ஆனால் இந்த புதிய அம்சம் ஏற்கனவே உள்ள கிரெடிட் வரம்பைக் கொண்ட போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலும் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களைப் பற்றிய விரிவாகப்பார்ப்போம். மேலும் ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களைப் பற்றிய விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.399 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் முதல் திட்டமான ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 75ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம் போன்ற நன்மைகளை வழங்குகிறது. பின்பு இதனுடன் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான ioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன இந்த திட்டம்.

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

இரண்டாவது திட்டமாக ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது. இதில் பயனர்களுக்கு 100ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா,வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். பின்பு இதனுடன் நெட்பிலிக்ஸ்,அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

மூன்றாவது திட்டமாக ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது, இதில் பயனர்களுக்கு 150ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் மற்றம் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் சுழற்சிக்கும் 2500ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் விருப்பம், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தாக்களுடன் வருகின்றன இந்த திட்டம்.

 ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

நான்காவது திட்டமாக ரூ.999 ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது, இதில் பயனர்களுக்கு 200ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, வரம்பற்ற குரல் மற்றும் எஸ்எம்எஸ், ஒவ்வொரு பில்லிங் திட்டத்தின் கீழ் 500ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் விருப்பம், பேமிலி திட்டத்தின் கீழ் கூடுதலாக மூன்று சிம் கார்ட் போன்ற நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திலும் நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோவின் சொந்த பயன்பாடுகளான JioTV, JioCinema மற்றும் பலவற்றின் OTT சந்தா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ரூ.1499 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ ரூ.1499 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்

கடைசி திட்டமாக ரூ.1499ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 300ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டா, ஒவ்வொரு பில்லிங் சூழற்சியிலும் 500ஜிபி வரை ரோல்ஓவர் வசதி, இந்தியாவில் இருக்கும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகள், அமெரிக்கா மற்றும் யுஏஇ நாடுகளில் வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Reliance Jio launches carry forward credit limit feature And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X