ஜியோ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சேவை: இன்டெராக்ட்.!
இப்போது இன்டொரக்ட் தளத்தில் இந்தியாவின் முக்கிய பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என ஜியோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி நேற்றைய தினம் இன்டெராக்ட் எனும் புத்தம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சேவை செயற்கை நுண்ணறிவு தளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இன்டெராக்ட் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் தளத்தில் நேரலையில் வீடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தளத்தில் இந்நிய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்ய முடியும் என ஜியோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கால் அழைப்புகள்:
ஜியோ செயலிகளில் ஏற்கனவே எச்டி வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது, இந்நிலையில் புதிதாக வந்துள்ள இன்டெராக்ட் எனும் செயற்கை தொழில்நுட்பம் கொண்ட இந்த தளத்தில் அருமையாக நேரலை வீடியோ கால்களை மேற்க்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்:
இப்போது இன்டெராக்ட் தளத்தில் இந்தியாவின் முக்கிய பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் மேற்கொள்ள முடியும் என ஜியோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர் 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியசமாக விளம்பரப்படுத்துவார் என ஜியோ தெரிவித்துள்ளது.

இன்டெராக்ட் (Interact ):
இன்டெராக்ட் என்பது திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும் பின்பு பல்வேறு பிரான்டுகளை ஊக்குவிக்கவும் தளமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த தொழில்நுட்பம் சிறந்த வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில்:
ஜியோ நிறுவனம் விரைவில் இந்த இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால் சென்டர்கள், விர்ச்சுவல் ஷோரூம்கள், கேட்லாக் போன்ற பல்வேறு அம்சங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்டுள்ளது இந்த ஜியோ நிறுவனம். மேலும உங்கள் கேள்விக்கு சரியான பதில் அளிக்கும் திறமையுடன் இந்த இன்டொரக்ட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வெளிவந்துள்ளது.


மை ஜியோ செயலி:
உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் மை ஜியோ செயலியில் தற்சமயம் இந்த இன்டெராக்ட் சேவை இருக்கும், இதை கிளிக் செய்து நேரலை வீடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோ மற்றும் இதர ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அமிதாப் பச்சனுக்கு வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications