மீண்டும் அம்பானி அதிரடி.. Jio அறிமுகம் செய்த ரூ.91 திட்டம்.. 28 நாட்கள் வேலிடிட்டி.. என்னென்ன சலுகைகள்?
பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம். தற்போது கூட மலிவு விலையில் ஒரு விலையில் ஒரு அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது இந்நிறுவனம் ரூ.91 ரீசார்ஜ் திட்டத்தைத் தான் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் தற்போது ஜியோபோன் பயனர்களுக்கு ரூ.91 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் அதிக நாள் வேலிடிட்டி உடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இதன் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.91 திட்டத்தில் (Jio Rs 91 Plan) ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 200எம்பி டேட்டாவும் இதில் கிடைக்கும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இலவசமாக 50 எஸ்எம்எஸ் இதில் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
குறிப்பாக ரூ.91 விலையில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அதிக டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைப்பதால் ஜியோபோன் பயனர்கள் இதில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்என்எல், ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம்.
எப்படி ரீசார்ஜ் செய்யலாம்? மைஜியோ (MyJio), ஜியோ.காம் (Jio.com) அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்கு சென்று இந்த ரூ.91திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோபோன் பயனர்களுக்கும் கிடைக்கும் சில அசத்தலான திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio RS 186 Plan) ஜியோபோன் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை வழங்குகிறது. இந்த திட்டம்.

ஜியோவின் ரூ.223 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio RS 223 Plan) ஜியோபோன் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தமாக 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகை சலுகை இதில் உள்ளது.
அதேபோல் ஜியோ ரூ.186 மற்றும் ரூ.223 திட்டங்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகின்றன. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளும் இந்த ஜியோபோன் திட்டங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
photo credit: themorningcontext.com


Click it and Unblock the Notifications