தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட 20 MHZ அலைக்கற்றை செயல்படுத்தும் ஜியோ..

|

இந்திய அரசின் தொலை தொடர்புத் துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை ஏல செயல் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள அனைத்து 22 வட்டங்களிலும் அலைக்கற்றையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிட்டட் (RJIL) கடந்த மார்ச் மாதம் வெற்றிகரமாக பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட 20 MHZ செயல்படுத்தும் ஜியோ

இந்நிறுவனம் 850 MHZ, 1500 MHZ மற்றும் 2300 MHZ பேண்ட்களில் இந்த அலைக்கற்றைகளைப் பெற்றிருந்தது. தமிழகத்தில் கூடுதலாக 850 MHZ பேண்டில் 5 MHZ; 1800 MHZ பேண்டில் 5MHZ மற்றும் 2300 MHZ பேண்டில் 10 MHZ அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் அமைந்துள்ள 22,000 தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அலைக்கற்றைகளிலும் கூடுதலாகப் பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளின் பயன்பாடு நடவடிக்கையை ஜியோ தொடங்கியிருக்கிறது. இதன்மூலம் 850 MHZ, 1800 MHZ மற்றும் 2300 MHZ பேண்ட் பயன்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய மொத்த அலைக்கற்றை அகலம் 50% முன்னேற்றம் பெரும்.

தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட 20 MHZ செயல்படுத்தும் ஜியோ

இந்த நடவடிக்கையானது, ஜியோ வலையமைப்பின் செயல்திறனை 50% அளவிற்கு உயர்த்தி இருப்பதோடு, தமிழ்நாட்டில் மிக அதிக தரவு வேகம் இருப்பதையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கப்பெறுவதையும் சாத்தியமாகியுள்ளது. தற்போதுள்ள பெருந்தொற்று சூழலில் நிகழும் பொது முடக்கத்தைக் கருத்தில் வைத்துப் பார்க்கையில் கூடுதல் அலைக்கற்றை சேர்க்கப்பட்டிருப்பது உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாக இருக்கிறது.

வீட்டிலிருந்து வேலைபார்ப்பவர்கள், ஆன்லைனில் பாடங்களைப் பயிலும் மாணவர்கள், வீட்டிலிருந்து பிசினஸ் செய்யும் தொழில்முனைவோர்கள் அனைவருக்கும் இது உதவும். வீட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு டிஜிட்டல் முறையில் தங்களின் வேலைகளைச் சிக்கல் இல்லாமல் முடிக்க இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் இது குறிப்பாக மருத்துவத்துறை பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது உறுதி.

தமிழகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட 20 MHZ செயல்படுத்தும் ஜியோ

சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 57,123 கோடி மதிப்பில் 20 ஆண்டுகள் கால அவருக்கு 488.35 MHZ என்ற மொத்த அலைக்கற்றை 22 வட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ பெற்றது. இதன் மூலம் தனது மொத்த அலைக்கற்றை அளவை 1717 MHZ ஆக உயர்த்தியுள்ளது. அதாவது 50% இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பெறப்பட்டிருக்கும் கூடுதல் அலைக்கற்றையின் மூலம் தனது 426 மில்லியன் வாடிக்கையாளருக்கு ஜியோ சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. இன்னும் கூடுதலாக 300 மில்லியன் பயனர்களைச் சேர்த்துக்கொள்ளவும், 5ஜி சேவைகளுக்கான மாற்றத்தை நோக்கி மேம்படவும் ஜியோவிற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio launches 20 MHZ bandwidth to make Tamil Nadu even better : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X