ரிலையன்ஸ் ஜியோ தரமான மூன்று திட்டங்கள் அறிமுகம்.! என்னென்ன தெரியுமா?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 'ஹோம் ஃப்ரம் ஹோம்' ஆட்-ஆன் என்ற திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ தற்சமயம்

ஜியோ தற்சமயம் ரூ.151 டேட்டா ஆட்-ஆன் பேக், ரூ.201 டேட்டா ஆட்-ஆன் பேக் மற்றும் திருத்தப்பட்ட ரூ.251 ஆட்-ஆன் பேக்என்று கூறப்படும் திட்டங்களைத் தான் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவின் ரூ.251-திட்டம்

குறிப்பாக ஜியோவின் ரூ.251-திட்டம் ஆனது லாக்டவுனின் ஆரம்ப நாட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வேறு எந்த நன்மைகளையும் வழங்காமல் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 56நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வெளிவந்தது. ஆனால் இப்போது ரூ.251 திட்டத்தில் அதே நன்மைகள் வழங்கப்படவில்லை, திருத்தப்பட்டுள்ளது.

Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் எப்படி டிஜிட்டலாக மாற்றுவது?Google Lens மூலம் கையால் எழுதிய வார்த்தைகளை ஒரே கிளிக்கில் எப்படி டிஜிட்டலாக மாற்றுவது?

ஜியோவின் ரூ.151 ஆட்-ஆன் பேக்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் ரூ.151 ஆட்-ஆன் பேக் ஆனதுது தினசரி வரம்புகள் இல்லாமல் மொத்தமாக 30ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இதேபோல ரூ.201 பேக் ஆனது தினசரி வரம்பு இல்லாமல் 40ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மையை வழங்குகிறது.

ரூ.251-பேக் ஆனது 50ஜிபி

அதேபோல் திருத்தப்பட்ட ரூ.251-பேக் ஆனது 50ஜிபி என்கிற மொத்த டேட்டா நன்மைகளுடன் வெளிவருகிறது. முன்னதாக 56நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் தினமும் 2ஜிபி டேட்டா என்கிற கணக்கில் மொத்தம் 112ஜிபி டேட்டாவை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய திட்டங்களில்

சுருக்கமாக இந்த புதிய திட்டங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், இவைகளின் செல்லுபடியாகும் காலாமனது பயனரின் மெயின் அக்கவுண்ட்டின் செல்லுபடியை பொறுத்தது, இதற்கென தனியாக எந்த வேலிடிட்டியும் இல்லை. மேலும் ஜியோ இதற்கு முன்பு அறிவித்த திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

 எனக்  குறிப்பிட்டுள்ளது

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 365நாட்கள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகாம் டாக் வலைதளத்தின் அறிவிப்பு அடிப்படையில் இந்த திட்டம்ஜியோ அல்லாத மற்றநெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்பு நன்மைகளை பற்றி சரியாக விவரங்கள் தெரியவில்லை எனக்குறிப்பிட்டுள்ளது. ஆனால் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் இருப்பதால் பலர் இதை தேர்வு செய்ய விரும்புவார்கள்.

நாட்களுக்கு வழங்கப்படும்.

இதேபோல ஜியோவின் மற்றொரு திட்டமான 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும்.

 ரூ.349-திட்டம் ஆனது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச
அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள்
ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Launched Three New Pre-paid Add On Plans With More Benifits: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X