ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.598-ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.! டேட்டா நன்மை? வேலிடிட்டி?
ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட அதிவேக இன்டர்நெட் வேகம் மற்றும் சிறந்த டேட்டா சலுகையை வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் கடந்த சில மாதங்களில் அதிக அளவு வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம்உள்ளது. அதன்படி ஜியோ நிறுவனம் புதிய ரூ.598-ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதைப்பற்றி விரிவான தகவல்களைப்பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.598-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். பின்பு ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு பேச
2000நிமிடங்கள் இலவச அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக ஜியோவின் புதிய ரூ.598-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா பயன்பாட்டிற்கான இலவச சந்தாவுடன் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயன்படும் என்று நினைத்து ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.499-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் கால் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. ஆனால் ரூ. 399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவுடன் இந்த திட்டம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.777-திட்டம் ஆனது தினசரி 1.5டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுடன் பேச 3000நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.401-திட்டம் ஆனது தினசரி 3டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் கூடுதலாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுடன் பேச 1000நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும்
தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி +ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

பட்டியலில் உள்ள ஜியோவின் அடுத்த திட்டம் ரூ.2599-ஆகும். ஜியோ நிறுவனத்தின் ரூ.2599-திட்டம் ஆனது தினசரி 2டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் கூடுதலாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்பு ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுடன் பேச 12000நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும்தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications