அதிருது மார்க்கெட்.. புது JioMotive 2023 டிவைஸ்.. 24 மணி நேர ஃபுள் செக்யூரிட்டி.. ஜியோ பென்சிங்னு ஏராள அம்சம்!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இப்போது யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புது வகை ஸ்மார்ட் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. பெண்டிரைவ் அளவில் இருக்கும் இந்த சாதனம், ஏரளமான ஸ்மார்ட் விஷயங்களை செய்கிறது. இது உண்மையில் என்ன செய்யும்?
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் ஜியோமோட்டிவ் 2023 (JioMotive 2023) என்ற புதிய விறல் அளவு டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. வழக்கம் போல ஜியோ நிறுவனம் மலிவு விலையில் இந்த ஜியோமோட்டிவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவொரு கார் உபகரணமாகும் (car gadgets). இது ஒரு பிளக்-அண்ட்-பிளே ஓபிடி (Plug-n-Play OBD) சாதனமாகும்.

இந்த குட்டி டிவைஸ், உங்கள் வாகனத்தையும், வாகனத்தின் பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. இந்த குட்டி ஜியோமோட்டிவ் டிவைஸில் பல ஸ்மார்ட் அம்சங்களை (JioMotive smart features) நிறுவனம் இணைத்துள்ளதாகவும் ஜியோ (Jio) நிறுவனம் கூறியுள்ளது. இது உண்மையில் உங்கள் கார் பாதுகாப்பு மற்றும் கார் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது.
அறியாதவர்களுக்கு, இது ஒரு ஆன்-போர்டு டைகோனிஸ்டிக்ஸ் (on-board diagnostics - OBD) டிவைஸ் ஆகும். இது உண்மையில் என்ன செய்யும் என்றால், இது உங்கள் காரின் செயல்திறன் மற்றும் சாத்தியமான சிக்கல்கள் குறித்த நிகழ்நேரத் தரவை வழங்குகிறது. இது உங்கள் காரில் ஏற்படக்கூடிய விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைத் தவிர்க்க உதவுகிறது.
அதேபோல், கார் பராமரிப்பை மேம்படுத்தவும் (improve maintenance), உங்கள் கார் சீராக இயங்குவதை உறுதிப்படுத்தவும் இந்தத் ஜியோமோட்டிவ் சாதனத்தின் டேட்டாவை நீங்கள் பயன்படுத்தலாம். சரி, இப்போது இந்த புதிய JioMotive (2023) சாதனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். JioMotive (2023) சாதனத்தின் அம்சங்களைப் பற்றிய விரிவான விபரங்கள் இதோ.
1. ஜியோமோடிவ் ரியல்டைம் வாகன கண்காணிப்பு (Real-time vehicle tracking):
ஜியோவின், ஜியோதிங்ஸ் (JioThings) ஆப்ஸ் பயனர்கள் தங்கள் கார் இருக்கும் இடத்தை 24×7 கண்காணிக்க அனுமதிக்கிறது. உங்கள் காருக்கான 24 மணி நேர செக்யூரிட்டியாக (24 hours car security) இந்த குட்டி டிவைஸ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஜியோ மற்றும் டைம் ஃபென்சிங் (Geo and time fencing):
பயனர்கள் எந்த வடிவத்திலும், அளவிலும் புவி வேலிகளை (geo-fences) உருவாக்கலாம். இந்த ஜியோ-பென்சிங் (geo-fencing) ஏரியாவிற்குள் நுழையும் போதும் அல்லது வெளியேறும் போதும் ஜியோமோடிவ் டிவைஸ் உங்கள் மொபைல் சந்தானத்திற்கு உடனடி எச்சரிக்கையை அனுப்பும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல், உங்கள் கார் வெளியே இருக்கிறது என்றால், உடனே நோட்டிபிகேஷன்னை பெறுவீர்கள்.
3. வாகன ஆரோக்கிய கண்காணிப்பு (Vehicle health monitoring):
ஜியோமோட்டிவ் சாதனம் காரின் ஆரோக்கியத்தை கண்காணித்து, 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு நோய் கண்டறிதல் சிக்கல் குறியீடுகளுக்கு (DTCs) விழிப்பூட்டல்களை வழங்குகிறது. இது பயனர்களுக்கு சாத்தியமான சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்வை உடனே தீர்க்க உதவுகிறது.
4. டிரைவிங் பிஹேவியர் அனாலிசிஸ் (Driving behavior analysis):
ஜியோமோட்டிவ் சாதனம் டிரைவரின் ஓட்டுநர் நடத்தையை பகுப்பாய்வு செய்கிறது. எரிபொருள் திறன், கடுமையான பிரேக்கிங் மற்றும் டிரைவிங் வேகம் போன்ற அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது பயனர்கள் தங்கள் வாகனம் ஓட்டும் பழக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
5. மற்ற அம்சங்கள் (Other features):
JioMotive சாதனம் பல அம்சங்களையும் வழங்குகிறது. இதில் கார் வைஃபை, டொயிங், சேதங்கள் பற்றிய விபரங்கள், மற்றும் விபத்து எச்சரிக்கைகள், வேக கண்காணிப்பு, 10-வினாடி லேடன்சி போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது. இந்த புதிய JioMotive (2023) சாதனத்தின் ஜியோ நிறுவனம், இந்தியாவில் ரூ.4,999 என்ற விலையில் அமேசான் (Amazon), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மற்றும் Jio.com வழியாக விற்பனை செய்கிறது. இதன் அசல் விலை ரூ.11,999 ஆகும்.


Click it and Unblock the Notifications