Home
News

ஜியோ திடீரென ரிலீஸ் செய்த புது 1000 ரூபாய் போன்.. என்ன மாடல்? என்ன விலை? எங்கே வாங்கலாம்?

மீண்டும்-மீண்டும் மக்களின் தேவையை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ரிலையன்ஸ் ஜியோவால் மட்டும் தான் முடியும் என்பதை நிறுவனம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஜியோ (Jio) நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் மிகவும் மலிவு விலையில் ஒரு புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ தனது ஜியோபாரத் (JioBharat) மொபைல் சீரிஸ் வரிசையின் கீழ் ஜியோபாரத் பி1 (JioBharat B1) என்ற புதிய மொபைல் போனை (மொபைல் போனை) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் அடிப்படையில் அதன் ஜியோபாரத் வி2 (JioBharat V2) மற்றும் ஜியோபாரத் கே1 கார்பன் (JioBharat K1 Karbonn) மாடல்களின் சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

ஜியோ திடீரென ரிலீஸ் செய்த புது 1000 ரூபாய் போன்.. என்ன மாடல்? விலை?

இந்த போன் ஜியோ நிறுவனத்தின் இணையதளத்தில் ஜியோபாரத் பி1 (JioBharat B1) சீரிஸ் என பட்டியலிடப்பட்டுள்ளது. ஜியோ, டெலிகாம் (telecom) சேவைகள் தவிர, சந்தையில் மலிவான போன்களை வழங்குவதில் பெயர் பெற்றுள்ளது. இது சற்று பெரிய டிஸ்பிளேவுடன் கூடிய அடிப்படை 4G ஃபோன் என்பதை நினைவில் கொள்ளவும். இது ஸ்மார்ட்போன் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இப்போது, ​​​​ஜியோ அறிமுகப்படுத்திய இந்த புதிய ஜியோபாரத் பி1 சாதனத்தின் விவரக்குறிப்பு மற்றும் விலை பற்றிய விபரங்களை கூர்ந்து கவனிப்போம். JioBharat B1 சீரிஸ் பியூச்சர் போனின் விலை ரூ.1,299 விலையில் வருகிறது. ஜியோவின் மற்றொரு லோ எண்ட் ஃபோன் சாதனம் இதுவாகும். இது 2.4' இன்ச் டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இந்த சாதனம் 2000 எம்ஏஎச் பேட்டரியைக் (battery) கொண்டுள்ளது.

ஜியோ திடீரென அறிமுகம் செய்துள்ள புதிய JioBharat B1 ஃபோன் அதன் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது, அதன் டிஸ்பிளே மற்றும் பேட்டரி திறனில் சிறிய மேம்பாடுகளை மட்டுமே வழங்குகிறது. இது பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், முன்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இது மேம்பட்ட அம்சத்தையே கொண்டுள்ளது.

இந்த அடிப்படை மாடல் ஜியோபாரத் பி1 ஃபோனில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை தயாரிப்பு படங்கள் காட்டினாலும், கேமராவின் மெகாபிக்சல்கள் குறித்து எந்த தகவலும் ஜியோ நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பித்தக்கது. ஜியோபாரத் பி1 மொபைல் சாதனம், ஜியோ ஆப்ஸ் (Jio Apps) உடன் முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ திடீரென ரிலீஸ் செய்த புது 1000 ரூபாய் போன்.. என்ன மாடல்? விலை?

ஜியோபாரத் பி1 சாதனத்தில் திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டு சிறப்பம்சங்களை ரசிக்க முடியும் என ஜியோ கூறுவதால், மற்ற மாடல்களைப் போலவே இந்த ஃபோனும் ஜியோ ஆப்ஸுடன் தொகுக்கப்பட்டுள்ளது. ஜியோவின் கூற்றின்படி, ஜியோ பாரத் தொடர் 23 மொழிகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது என்பது இந்த போனின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் படி, ஜியோவின் முன்பே நிறுவப்பட்ட பயன்பாடுகள் தொலைபேசியுடன் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஜியோ அல்லாத சிம் கார்டுகளை ஜியோபாரத் தொலைபேசிகளில் பயன்படுத்த முடியாது என்பதும் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். இந்த பதிவை எழுதிய நேரத்தில் போது JioBharat B1 ஃபோன் கருப்பு நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், JioBharat B1 Series ஆனது முந்தைய மாடல்களை விட சற்று பெரிய டிஸ்பிளே மற்றும் பேட்டரி கொண்ட அடிப்படை 4G ஃபோன் ஆகும். வெறும் ரூ.1,299 விலையில் மக்களுக்கு 4ஜி சேவைக்கு மாறுவதற்கான ஒரு வாய்ப்பை ஜியோ உருவாகியுள்ளது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். உங்களுக்கும் இந்த போனை உடனே வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே ஜியோவின் இணையத்தள பக்கத்தில் இருந்து ஆர்டர் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio Launched JioBharat B1 Mobile Phone In India Under Rs 1299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X