ரிலையன்ஸ் ஜியோவின் 'லோகேட் மை டிவைஸ்' அம்சம், விரைவில்.!

நீங்கள் அடிக்கடி உங்கள் ஸ்மார்ட்போனை தவறவிடும் போக்கை கொண்டவர்கள் என்றால் இந்த ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வசதி உங்களுக்கானது தான்.

|

வெகு நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த ரிலையன்ஸ் ஜியோ, சமீபத்தில் அதன் இலவச சலுகை நீட்டிப்பு அறிவிப்பான ஹேப்பி நியூ இயர் ஆபரை வெளியிட்டு மீண்டும் தலைப்பு செய்திக்கான இடத்தை பிடித்தது. இப்பொது சிறிது காலம் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் அதன் புதிய அம்சம் ஒன்றின் அறிமுகம் மூலம் தலைப்பு செய்தியாகியுள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ 'லோகேட் மை டிவைஸ்' என்றதொரு புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.!

இந்த 'லோகேட் மை டிவைஸ்' என்ற புதிய வசதியானது அடிப்படையில் ஜிபிஎஸ் உதவியுடன் பயனர்கள் தங்கள் சாதனங்களை கண்டறிய உதவும் ஒரு அம்சமாகும். இந்த அம்சம் குறிப்பாக அடிக்கடி தங்கள் ஸ்மார்ட்போன்களை தவறுதலாக எங்காவது வைத்து விட்டு தேடும் பழக்கம் கொண்ட பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வரைபடம் மூலம்

வரைபடம் மூலம்

குறிப்பிடத்தக்க வகையில் இந்த 'லோக்கேட் மை டிவைஸ்' அம்சம் ஆனது உங்களின் ஸ்மார்ட்போன் லோகேட் ஹிஸ்டரி பற்றிய தகவலை உங்களுக்கு வழங்கும். எனவே கிடைக்கப்பெறும் தேதி மற்றும் நேரம் உட்பட மேலும் விரிவான தகவல்களை கொண்ட ஒரு வரைபடம் மூலம் நீங்கள் உங்கள் கருவியை கண்காணிக்க முடியும்.

எளிமை

எளிமை

புதிய அம்சம் அறிமுகமான பின்னர் ஜியோ சந்தாதாரர்கள் ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைவதின் மூலம் இந்த வசதியை எளிமையாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இணையதளத்தில் இருந்தபடியே

இணையதளத்தில் இருந்தபடியே

பயனர்கள் 'மை அக்கவுண்ட்' கிளிக் செய்த பின்னர் அவர்கள் 'லோக்கேட் மை டிவைஸ்' உட்பட பல விருப்பங்களை திரையில் பார்க்க முடியும். தற்போது, இந்த அம்சம் தோன்றாது ஆனால் இது விரைவில் அறிமுகமாகும். இந்த அம்சம் மூலம் பயனர்கள் இணையதளத்தில் இருந்தபடியே தங்கள் ஸ்மார்ட்போன்களை கண்காணிக்க முடியும்.

க்ளீன் மற்றும் லாக்

க்ளீன் மற்றும் லாக்

கூடுதலாக, பயனரின் மொபைல் திருடப்பட்டு விட்டது என்ற வழக்கில் ஜியோசெக்யூரிட்டி ஆப் வழியாக உங்கள் சாதனத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள். உடன் இந்த ஆப் உதவியுடன், பயனர்கள் தொலைந்த கருவியின் டேட்டாவை க்ளீன் செய்வது மற்றும் அதனை லாக் செய்வது ஆகியவைகளையும் நிகழ்த்தலாம். முக்கியமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கையில்

அறிக்கையில்

குறிப்பாக புதிய அம்சம் சார்ந்த இந்த அறிக்கையில் இந்த வசதியை லைஃப் பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமா அல்லது அனைத்து ஜியோ சந்தாதாரர்கள் அனைவருக்குமா என்பதை பற்றிய எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

புதிய ஜியோ சிம், ஹேப்பி நியூ இயர் ஆபருடன் பெறுவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Reliance Jio to Launch ‘Locate My Device’ Feature: Here’s What It’s all About. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X