இந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு விலைப்பிரிவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகினறன.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் விலையில் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

 முன்னணி இடத்தில் இருக்கும் ஜியோ

முன்னணி இடத்தில் இருக்கும் ஜியோ

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி இடத்தில் இருக்கும் ஜியோ, ஐடெல் உடன் இணைகிறது. அதேபோல் அடுத்தடுத்த மாதத்திற்குள் இந்த சாதனம் சந்தைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோவின் பொதுவான இலக்கு இதிலும் பிரதிபலிக்கிறது. அது சாதாரண அம்ச தொலைபேசி பயன்படுத்தும் பயனர்களை ஸ்மார்ட்போன் பயன்படுத்த வைப்பது ஆகும்.

ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள்

ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள்

ஜியோ ஐடெல் கூட்டணியின் மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் மற்றும் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு மே மாதத்தில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என ஐஏஎன்எக்ஸ் தெரிவிக்கிறது. மேலும் இந்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடெல் ஆகிய ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் எனவும் இது மொபைல் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

ஐடெல் இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள்

ஐடெல் இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள்

ஐடெல் இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ, இது நிறுவனம் பிற நிறுவனங்களைவிட குறைந்த விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை பயனர்களுக்கு கிடைப்பை வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்ய இருக்கிறது. அதுமட்டுமின்றி ஜியோ சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் கிடைக்கும் எனவும் இந்த சாதனத்தின் விலை ரூ.4000 என்ற பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜியோ 4ஜி அம்ச ஸ்மார்ட்போன்கள்

ஜியோ 4ஜி அம்ச ஸ்மார்ட்போன்கள்

ஜியோ நோக்கியா, லாவா மற்றும் கார்பனுடன் இணைந்து செயல்படுகிறது. காரணம் ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களுடன் பிற சலுகைகள் வழங்குவதன் மூலம் ஜியோவின் சந்தைப் பங்கு அதிகரிக்க இணைந்து செயல்படுகிறது. அதுமட்டுமின்றி ஜியோ 4ஜி அம்ச பயனர்களை தக்க வைத்துக் கொள்ளவும் எடுக்கப்படும் நடவடிக்கை இதுவாகும்.

உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்

உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான லாவா, கார்பன் மற்றும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடித்தி வருகிறது. இந்நிறுவனங்களின் உதவிகளுடன் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கக்கூடும் எனவும் இந்தவகை சாதனங்களின் விலை ரூ.8000 என்ற பிரிவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அசுர வளர்ச்சி அடைந்த ஜியோ

அசுர வளர்ச்சி அடைந்த ஜியோ

இந்திய சந்தையில் அறிமுகம் செய்த குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனம் ஜியோ. ஜியோ இந்தியாவில் முதலாவது தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கிறது என்று சொன்னால் அது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரிலையன்ஸ் ஜியோ இந்தாண்டு பிற்பகுதியில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோபுக்கை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

ஜியோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை கூகுள் உடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இதுகுறித்த ET டெலிகாம் அறிக்கையின்படி இந்தாண்டு நடைபெறும் வருடாந்திர ஜியோ பொதுக் கூட்டத்தில் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போன், ஜியோபுக் ஆகிய இரண்டையும் அறிவிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்

5ஜி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்

ஜியோ இரண்டாம் பாதி ஏஜிஎம் நிகழ்வில் புதிய தயாரிப்புகளை அறிவிக்கக்கூடும் என தெரிகிறது. கடந்தாண்டு பொதுக் கூட்டத்திலேயே நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளுக்கான முன்முயற்சிகளை அறிவித்தது. ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் இயக்கத்தில் ஜியோவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் எனவும் குறைந்தவிலை சாதனமாக இருக்கும் எனவும் தெரிகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Reliance Jio Joined With Itel to Launch Lowest Price Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X