Home
News

ஜியோபோன் நெக்ஸ்ட் பற்றி மக்களின் குழப்பம் இது தானா? இது LYF போனா இல்ல ஆண்ட்ராய்டு போனா?

ஜியோ நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறது என்ற செய்தியைத் தான் நாம் கடந்த சில மாதங்களாக அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று ஏராளமான கசிவு தகவல்களைப் பார்த்து வந்தோம். இதுவரை காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இப்போது ஒரு சுவாரசியமான தகவல் காத்திருக்கிறது. ஆம், நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், ஜியோவின் ஆண்ட்ராய்டு போன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LYF போனா அல்லது ஆண்ட்ராய்டு போனா?

இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் LYF போனா அல்லது ஆண்ட்ராய்டு போனா?

இன்னும் சில மணிநேரங்களில், ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருந்தது, ஆனால், இதன் அறிமுகம் இன்று இல்லை என்று நிறுவனம் இப்போது கூறியுள்ளது. இது மலிவான 4 ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இது ஜியோ மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட புது வகை ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் LYF ஸ்மார்ட்போன்களின் பிரதி அல்லது சிறந்த பதிப்பு அல்ல என்பதை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த குழப்பம் மக்கள் மத்தியில் இருப்பதை உணர்ந்துள்ளோம்.

கூகிள் உதவியுடன் மலிவான விலையில் உருவாக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட்

கூகிள் உதவியுடன் மலிவான விலையில் உருவாக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட்

இது முழுமையாக ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகும். கூகிள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை ஜியோ நிறுவனம் மலிவான விலையில் கிடைக்கும் படி வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இப்போது, ​​நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்ட் மேம்பட்ட சோதனையில் இருப்பதை உறுதி செய்துள்ளது. தற்போது, ​​நிறுவனம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுடன் ஸ்மார்ட்போனை சோதித்து வருகிறது மற்றும் பின்னூட்டத்தின் அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் அதைச் சரிப்படுத்தும் என்று கூறியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?

தீபாவளி பண்டிகைக்கு ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி பண்டிகை காலத்திற்குள் ஸ்மார்ட்போனை சந்தைக்கு கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. கடுமையான சோதனையின் மூலம், நிறுவனம் ஒரு சிறந்த முடிக்கப்பட்ட தயாரிப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை இந்தியா முழுவதும் பரவலாகக் கிடைக்கச் செய்யும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இதனால், ஜியோ பயனர்கள் இந்தியா முழுக்க யாருக்குத் தேவையோ அதை அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே வாங்க முடியும்.

இந்தியாவில் திடமான 4 ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க திட்டம்

இந்தியாவில் திடமான 4 ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க திட்டம்

ஜியோபோன் நெக்ஸ்ட் சந்தையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது, மேலும் இது மிகக் குறைந்த விலை மற்றும் பயனர்களுக்குத் திடமான 4 ஜி ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குவதன் மூலம் இதை செய்யப் போகிறது. ரிலையன்ஸ் ஜியோ இந்த மலிவு விலையில் 4 ஜி சாதனத்தின் மூலம் இந்தியாவை '2 ஜி முகட்' ஆக மாற்றத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் பல அறிக்கைகள் ஸ்மார்ட்போனுக்கு வெவ்வேறு விலைகளைக் கூறியுள்ளன.

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை என்னவாக இருக்கும்? இதில் இன்னொரு மாடலும் இருக்கிறதா?

ஜியோபோன் நெக்ஸ்ட் விலை என்னவாக இருக்கும்? இதில் இன்னொரு மாடலும் இருக்கிறதா?

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விலை 5,000 ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் மற்றொரு வேரியண்ட் மாடலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இது உயர் வேரியண்ட் வேரியண்ட் மாடலாக இருக்கும் என்றும், இது ரூ. 7,000 விலையில் கிடைக்கலாம். இரண்டு மாடல்களும் பயனர்களுக்கு 10% டவுன் பேமென்ட்டில் மட்டுமே கிடைக்கக்கூடும். அதாவது அவர்கள் ஜியோபோன் நெக்ஸ்ட் ரூ. 500-க்கு குறைவாகப் பெறலாம்.

ஜியோபோன் நெக்ஸ்டுக்காக பிரத்தியேகமான புதிய திட்டங்ள் அறிமுகமா?

ஜியோபோன் நெக்ஸ்டுக்காக பிரத்தியேகமான புதிய திட்டங்ள் அறிமுகமா?

ஜியோ இரண்டு ஜியோபோன் திட்டங்களை நிறுத்தியதால், நிறுவனம் ஜியோபோன் நெக்ஸ்டுக்காக பிரத்தியேகமான புதிய திட்டங்களை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகிளின் உதவியுடன் முடிந்தவரை இந்த சாதனத்தின் மென்பொருளை மேம்படுத்தியிருப்பதால் பயனர்களுக்கு மிகவும் தடையற்ற ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குவதாக ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சம்

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சம்

ஜியோபோன் நெக்ஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்காக ஸ்மார்ட்போன் 8 எம்பி சென்சார் உடன் வரும் என்றும், பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி சென்சார் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் விலை குறைவான 4ஜி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் இடம்பெறும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சம் கூட இருக்கா? அட்டகாசம் தான் போங்க

கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சம் கூட இருக்கா? அட்டகாசம் தான் போங்க

ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட சில விஷயங்கள் என்னவென்றால், ஜியோபோன் நெக்ஸ்ட் கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் கேமரா மாசத்தில் ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்) வடிப்பான்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஜியோபோன் நெக்ஸ்ட் வரும் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு புது ஆடைகளுடன் இந்த வருடம் நாம் ஒரு புது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்பது அருமையான விஷயம் தானே.

Best Mobiles in India

English summary
Reliance Jio JioPhone Next Is Not A Replica Or Smarter Version Of The LYF Smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X