'இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட' ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபை 4ஜி..!

|

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் இன்றும் பெற ஒரு கடினமான விடயமாகவே இருக்கும் அதே தருணத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சப்தமின்றி ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் சில நகரங்களில் விற்பனைக்கு உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஜியோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட் ஆனது ரூ.1999/-க்கு சில நல்ல அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

வடிவமைப்பு :

வடிவமைப்பு :

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ஜியோஃபை அதன் முன்னோடி விட பெரிய மற்றும் மென்மையான முனைகள் கொண்ட பளபளப்பான முட்டை வடிவில் உள்ளது, அதாவது நேர்த்தியான பூச்சு வடிவமைப்பு கொண்டுள்ளது.

காட்சி :

காட்சி :

மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் ஓஎல்இடி டிஸ்பிளேவை கூறலாம். உடன் இந்த புதிய ரிலையன்ஸ் சாதனம் ஆன்/ ஆப் பவர், பேட்டரி ஆயுள் அளவு, 4ஜி - வைஃபை சமிக்ஞை வலிமைகளை காட்சிப்படுத்துகிறது.

2600எம்ஏஎச் பேட்டரி :

2600எம்ஏஎச் பேட்டரி :

இந்த பெரிய வடிவம் ஒருங்கிணைந்த 2600எம்ஏஎச் பேட்டரியை உள் கொண்டுள்ளது இதன் முந்தைய வெர்ஷன் 2300எம்ஏஎச் பேட்டரி கொண்டிருந்தது.

மைக்ரோ எஸ்டி கார்ட் :

மைக்ரோ எஸ்டி கார்ட் :

புதிய ரிலையன்ஸ் ஜியோ ஜியோஃபை கருவியானது மைக்ரோ எஸ்டி கார்ட் (32 ஜிபி வரை) ஆதரவை தொடர்கிறது.

விலை :

விலை :

இக்கருவியின் விலை முதலில் ரூ.2,899/- என்று அறிமுகம் செய்யப்பட்டு பின்பு ரூ.1,999 என்று விலை குறைக்கப்பட்டது என்பதும் ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் டிசம்பர் 31-வரை இலவசமாக தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாயின்ஜியோஆப் :

ஜாயின்ஜியோஆப் :

ரிலையன்ஸ் ஜியோ ஐயோஃபை 4ஜி வயர்லெஸ் ஹாட்ஸ்பாட்டை கொண்டு நீங்கள் உங்கள் 4ஜி ஆதரவு இல்லாத தொலைபேசியில் கூட ஜாயின்ஜியோஆப் (Join Jio app) மூலம் 4ஜி எல்டிஇ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் :

இந்தியாவில் :

உடன் அந்த ஆப் மூலம் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களையும் நிகழ்த்திக்கொள்ளலாம். புதிய ரிலையன்ஸ் ஜியோ ஜியோஃபை கருவியில் 'இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தெரியுமா.? பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப்பை இயக்க ஒரு தந்திரம் இருக்கு..! அதை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..!

Best Mobiles in India

English summary
Reliance Jio JioFi 4G Hotspot With Oled Display, 2600mAh Battery Launched at Rs. 1,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X