மொத்தம் 102ஜிபி டேட்டா: 51நாட்கள் வேலிடிட்டி.! சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்த ஜியோ.!

|

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் எந்தளவு மாற்றம் நிகழ்கிறதோ, அதற்கு மேலாகவே ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கட்டண உயர்வு, ஐயுசி நிமிடங்கள் 4 டேட்டா வவுச்சர் போன்ற அறிவிப்புகளில் பல மாற்றங்கள் என்றே கூறலாம்.

இணைப்புக் கட்டணம் (ஐயுசி)

இணைப்புக் கட்டணம் (ஐயுசி)

ஒரு தொலைத் தொடா்பு நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பிற நிறுவனங்களின் எண்களைத் தொடா்புகொண்டு பேசும்போது, அந்த அழைப்பை ஏற்பதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். இது, நிறுவனங்களிடையிலான இணைப்புக் கட்டணம் (ஐயுசி) என்றழைக்கப்படும். அந்தக் கட்டணத்தை, ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசாவாக டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) நிா்ணயித்துள்ளது.

NON-JIO மொபைல் குரல் அழைப்புகள்

NON-JIO மொபைல் குரல் அழைப்புகள்

ஜியோ நிறுவனம் சந்தையில் கால் எடுத்து வைத்ததுமே, தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. மொபைல்-அழைப்பு தொடர்பான கட்டணங்களுக்கான ஒழுங்குமுறை கொள்கை மாற்றங்களினால் ஜியோ NON-JIO மொபைல் குரல் அழைப்புகளுக்கான IUC கட்டணத்தை அறிவித்தது. இதன் மூலம் ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது.

வீட்டில் இருந்தபடியே வேலை

வீட்டில் இருந்தபடியே வேலை

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வலியுறுத்தி வருகிறது. அதேபோல் ஏராளமானோர் தொழிலுக்கு அப்பாற்பட்டு தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு ஏதுவாக ஜியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

செவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்..செவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்..

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

இந்த டேட்டா வவுச்சர் திட்டங்களின் பெயர் குறிப்பிடுவது போல, இவை டேட்டா டாப்-அப்களாக மட்டுமே செயல்படுகின்றன. அதாவது, பயனர் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் இந்த கூடுதல் டேட்டா நன்மையையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம், அப்படியே இந்த டேட்டா வவுச்சர்களுக்கும் வழங்கப்படுகிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது

டேட்டா வவுச்சரின் முந்தைய விபரங்கள்

டேட்டா வவுச்சரின் முந்தைய விபரங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.11 டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு 400 எம்.பி 4 ஜி டேட்டா வழங்கப்பட்டது.

அதன்பிறகு, ரூ.21 வவுச்சரின் கீழ் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

அதேபோல், ரூ.51 திட்டத்தின் கீழ் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

இறுதியாக, ரூ.101 வவுச்சரின் கீழ் அதிகப்படியாகப் பயனருக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.


தற்போது கூடுதலாக வழங்கப்படும் திட்டங்கள்

75 நிமிடம் காலவரையறை

75 நிமிடம் காலவரையறை

ரூ.11-க்கு வழங்கப்படும் திட்டங்களானது அன்லிமிட்டெட் ஜியோ டூ ஜியோ கால் வழங்குகிறது அதோ 800 எம்பி இணையதள சேவையையும் வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுக்கு 75 நிமிடம் காலவரையறை வழங்குகிறது.

அன்லிமிட்டெட் கால் வசதி

அன்லிமிட்டெட் கால் வசதி

அதேபோல் ரூ.21-க்கு வழங்கும் திட்டமானது அன்லிமிட்டெட் கால் வசதியும் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையும் 200 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது. ரூ.51-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு 6 ஜிபி டேட்டே மற்றும் 500 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது. ரூ.101-க்கு கிடைக்கும் திட்டமானது வரம்பற்ற குரல்அழைப்பு ஆனால் இதில் 12 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும் இதில் 1000 நிமிட ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளுடன் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர்

ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் காம்போ திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் இந்த நான்கு புதிய டேட்டா வவுச்சர்கள் வரம்பற்ற காம்போ திட்டங்களின் மேல் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் கூட, ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் திட்டத்தைப் பயனர்கள் ஒரு முழுமையான திட்டமாகப் தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை தேவையில்லை என்ற பயனர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்

தினசரி 2 ஜிபி டேட்டா

தினசரி 2 ஜிபி டேட்டா

ரூ.251-க்கும் திட்டத்தை பொருத்தவரையில் அட்டகாச சலுகை என்றே கூறலாம் இதில் எந்தவித குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் என எதுவும் வழங்குவதில்லை இருப்பினும் இதில் தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் மொத்தம் 102ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.4999 ,மற்றும் ரூ.2121: எது சிறந்தது?ரிலையன்ஸ் ஜியோ ரூ.4999 ,மற்றும் ரூ.2121: எது சிறந்தது?

ஐயுசி கட்டணம் குறித்து பார்க்கையில்

ஐயுசி கட்டணம் குறித்து பார்க்கையில்

அதேபோல் ஐயுசி கட்டணம் என்று பார்க்கையில் இது டாப் அப் வவுச்சர்களாகவே பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரூ.10-க்கு ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ அல்லாத பிற நிறுவன அழைப்புகளுக்கு 124 நிமிட குரல் அழைப்புகள் தருவதோடு 1 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. அதேபோல் 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 249 நிமிட ஜியோ அல்லாத குரல் அழைப்புகளும் 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது.

ரூ.50-க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டம்

ரூ.50-க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டம்

மேலும் ரூ.50-க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டத்தில் 656 நிமிட ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகள் மற்றும் இதில் 5 ஜிபி டேட்டா வழங்குகிறது. அடுத்தப்படியாக 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது 1362 நிமிட குரல் அழைப்புகளும் 10 ஜிபி டேட்டாவும் கிடைக்கிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் ஜியோ டூ ஜியோ இலவச அழைப்புகள். மேலும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ஜிபி வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Reliance jio iuc or 4G data voucher: which one is better

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X