Jio வழங்கும் 2 ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி?
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் டேட்டா பயன்பாடு தற்பொழுது அதிகரித்துள்ளது. இந்த நிலையை அறிந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா நன்மையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இந்த இலவச டேட்டா நன்மையை எப்படி பெறுவது என்று பார்க்கலாம்.

ஜியோ பயனர்களுக்கு அடுத்த குஷி
ஜியோ நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களுக்கு மலிவான விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. ஊரடங்கினால் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இவர்களைக் கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் சமீபத்தில், ஜியோவின் Work From Home என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஜியோவின் இலவச 2 ஜிபி டேட்டா
ஊரடங்கினால் நாட்டில் இப்போது டேட்டா பயன்பாடு அதிகரித்துள்ளது, இதனால் நெட்வொர்க் ட்ராபிக் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையைச் சமாளிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் ஜியோ தனது பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மையை இலவசமாகக் கிடைக்கும்படி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இலவச ஜியோ டேட்டா பேக் விபரம்
JIO DATA PACK என்ற இந்த புதிய டேட்டா பேக் திட்டத்தின் கீழ் தினமும் 2 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா சேவையை இலவசமாக வழங்குகிறது. இந்த 2 ஜிபி இலவச டேட்டா முடிந்த பிறகு 64Kbps என்ற வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 4 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வாடிக்கையாளர்கள் இந்த இலவச டேட்டா நன்மைக்கு எந்த ரீசார்ஜ்-ம் செய்யத் தேவையில்லை.

மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மட்டுமே
இந்த இலவச டேட்டா திட்டம் மார்ச் 28 முதல் துவங்கி ஏப்ரல் 1 வரை கிடைக்கிறது. ஜியோவின் இந்த இலவசத் திட்டம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இலவசத் திட்டம் உங்களுக்கு வேண்டுமென்றால், Myjio App-ல் உள்ள டேட்டா பேக் பிரிவின் கீழ் சென்று செக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications