Home
News

Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய டெலிகாம் சந்தையில் தனது ஆதிக்கத்தைக் காட்டிவருகிறது. குறிப்பாக, இதற்குக் காரணம் அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் தான். அண்மையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் கட்டண மாற்றத்தை அறிவித்த பின்னரும், ஜியோ மட்டுமே டெலிகாம் சந்தையில் முன்னிலையில் உள்ளது.

மலிவு விலையில் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டம்

மலிவு விலையில் சிறப்பான ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் பிரிவில் முன்னணியில் உள்ளதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது அதன் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டமான ரூ.199 திட்டம் கூறப்படுகிறது. தினமும் 1.5 ஜிபி டேட்டா பயனை வழங்கும் இந்த திட்டம் ஜியோ பயனர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் ஜியோவின் ரூ.399 திட்டத்தையும் கவனிக்க மறவாதீர்கள்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் 1.5 ஜிபி தினசரி டேட்டா திட்டங்கள் ரூ.199 முதல் தொடங்குகின்றன. இந்த திட்டம் 28 நாட்களுக்கு மொத்தம் 42 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கான 1,000 FUP நிமிடங்கள் போன்ற சலுகைகளுடன் இந்த திட்டம் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மிக முக்கியமானது, தினமும் 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான 2,000 FUP நிமிடங்கள் என 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு மொத்தமாக 84 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ 555 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ 555 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ சில மாதங்களுக்கு முன்பு ஆல்-இன்-ஒன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரூ.555 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தினமும் 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான 3,000 FUP நிமிடங்கள் என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ .2,299 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ .2,299 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் போர்ட்ஃபோலியோவில், தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் நீண்டகால திட்டம் ரூ.2,299 திட்டமாகும். தினமும் 1.5ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ - ஜியோ குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மற்ற நெட்வொர்க்கிற்கான 12,000 FUP நிமிடங்கள் என 365 நாட்கள் வரை வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து திட்டங்களும் ஜியோவின் OTT பயன்பாடுகளான ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பல சேவைகளுக்கான அணுகலுடன் கிடைக்கிறது. மாற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் போல் இல்லாமல், ஜியோ தனது பயனர்களுக்கு மலிவு விலையில் டேட்டா நமைகளுடன் இந்த கூடுதல் சேவைகளையும் வழங்கி வருகிறது என்பதை மறக்கவேண்டாம்.

Best Mobiles in India

English summary
Reliance Jio is Providing 1.5GB Daily Data From Rs.199 to Rs.2,299 Prepaid Plans Up To 365 Days Validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X