Home
News

Jio பயனர்களுக்கு கிடைத்த 4 புதிய டேட்டா வவுச்சர்கள் - வேலிடிட்டியில் ஏராள தாராளம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்பொழுது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நான்கு புதிய டேட்டா வவுச்சர் திட்டங்கள் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேட்டா வவுச்சர்கள் பயனர்களுக்குக் குறிப்பிட்ட டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது. ஆனால், ஜியோ இதன் வேலிடிட்டியில் தனது ஏராள தாராளத்தைக் காட்டியுள்ளது. அந்த ஏராள தாராளம் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் கூடுதல் நன்மை

இந்த புதிய டேட்டா வவுச்சர் திட்டங்களின் பெயர் குறிப்பிடுவது போல, இவை டேட்டா டாப்-அப்களாக மட்டுமே செயல்படுகின்றன. அதாவது, பயனர் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுடன் இந்த கூடுதல் டேட்டா நன்மையையும் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தி வரும் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம், அப்படியே இந்த டேட்டா வவுச்சர்களுக்கும் வழங்கப்படுகிறது என்று ஜியோ தெரிவித்துள்ளது.

நான்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சர்கள்

நான்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சர்கள்

தற்பொழுது ஜியோ நிறுவனம், அதன் டேட்டா வவுச்சர் திட்டத்தின் கீழ் ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 என்ற நான்கு புதிய 4ஜி டேட்டா வவுச்சர்களை அறிமுகம் செய்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது டேட்டா வவுச்சர்களுக்கு 28 நாட்கள் என்ற வேலிடிட்டியை வழங்கியுள்ளது. ஏர்டெல் போலல்லாமல், ஜியோ நிறுவனம் இந்த டேட்டா வவுச்சர்களுக்கு தனியாக வேலிடிட்டி என்று எதையும் வழங்கவில்லை.

தனித்துவமான ரூ.251 டேட்டா வவுச்சர்

தனித்துவமான ரூ.251 டேட்டா வவுச்சர்

ஆனால், அதற்குப் பதிலாக தனது ஜியோ பயனர்கள் பயன்படுத்தும் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் அதே செல்லுபடியாகும் வேலிடிட்டி காலத்தை இந்த டேட்டா வவுச்சர்களுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பிடப்பட்ட நான்கு வவுச்சர்களுடன், ஜியோ மற்றொரு தனித்துவமான டேட்டா வவுச்சர் திட்டத்தையும் தன் வசம் வைத்துள்ளது. இந்த திட்டம் 51 நாட்கள் வேலிடிட்டியுடன் வெறும் ரூ.251 விலையில் கிடைக்கிறது.

டேட்டா வவுச்சரின் கீழ் கிடைக்கும் டேட்டா விபரங்கள்

டேட்டா வவுச்சரின் கீழ் கிடைக்கும் டேட்டா விபரங்கள்

  • ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.11 டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு 400 எம்.பி 4 ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
  • அதன்பிறகு, ரூ.21 வவுச்சரின் கீழ் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • அதேபோல், ரூ.51 திட்டத்தின் கீழ் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • இறுதியாக, ரூ.101 வவுச்சரின் கீழ் அதிகப்படியாகப் பயனருக்கு 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • ரீசார்ஜி திட்டத்தின் வேலிடிட்டி தான் டேட்டா வவுச்சர் வேலிடிட்டி

    ரீசார்ஜி திட்டத்தின் வேலிடிட்டி தான் டேட்டா வவுச்சர் வேலிடிட்டி

    நீங்கள் பயன்படுத்தும் தற்போதைய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்துடன் இந்த வவுச்சர்கள் செல்லுபடியாகும். உதாரணத்திற்கு, நீங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் ரூ.555 ரீசார்ஜி திட்டத்தைப் பயன்படுத்தி வந்தால், அந்த திட்டத்திற்கு வழங்கப்படும் அதே 84 நாட்கள் வேலிடிட்டி உங்களின் டேட்டா வவுச்சருக்கும் வழங்கப்படும். இப்போது நீங்கள் ரூ.101 வவுச்சர் ரீசார்ஜ் செய்திருந்தால், இத்திட்டத்தின் 6 ஜிபி டேட்டா உங்களுக்கு அடுத்த 84 நாட்களுக்குச் செல்லுபடியாகும்.

    பாரதி ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்

    பாரதி ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்

    இதேபோல், இந்த வேலிடிட்டி சலுகை தற்பொழுது ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 என்ற அனைத்து நான்கு புதிய டேட்டா வவுச்சர் திட்டத்திற்கும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.48 மற்றும் ரூ.98 என்ற டேட்டா வவுச்சரின் கீழ் 3ஜிபி மற்றும் 6ஜிபி டேட்டா நன்மையை வெறும் 28 நாட்களுக்கு மட்டும் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரூ.251 விலையில் 101 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ

    ரூ.251 விலையில் 101 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ

    இந்த நான்கு புதிய டேட்டா வவுச்சர்களுடன், ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.251 டேட்டா வவுச்சர் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா நன்மையை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ஜியோவின் இந்த டேட்டா வவுச்சர் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 101 ஜிபி டேட்டா 51 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது என்பது நல்ல சலுகையாக இருக்கிறது.

    காம்போ திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி

    காம்போ திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடி

    ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து கிடைக்கும் இந்த நான்கு புதிய டேட்டா வவுச்சர்கள் வரம்பற்ற காம்போ திட்டங்களின் மேல் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் கூட, ஜியோவின் ரூ.251 டேட்டா வவுச்சர் திட்டத்தைப் பயனர்கள் ஒரு முழுமையான திட்டமாகப் தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வாய்ஸ் காலிங் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை தேவையில்லை என்ற பயனர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Reliance Jio Is Offering 4 New Data Voucher Add-Ons With Same Validity Of Your Existing Prepaid Plan : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X